இனி அப்டேட் கேட்க மாட்டோம் தல…. ரசிகர்கள் வைரஸ் போஸ்டர்

 

இனி அப்டேட் கேட்க மாட்டோம் தல…. ரசிகர்கள் வைரஸ் போஸ்டர்

வலிமை படத்தின் அறிவிப்பு வெளியாகி ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இதுவரை அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கூட வெளியாததால் ஏக்கமடைந்திருக்கும் ரசிகர்கள் பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி, கிரிக்கெட் வீரர் மொயின் அலி உள்ளிட்ட பலரிடம் வலிமை அப்டேட் குறித்து கேட்டு மிகவும் தொல்லை செய்துவந்தனர். இதனால், அப்செட்டான நடிகர் அஜித், பொறுமையுடன் காத்திருக்க வேண்டுமென அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், “விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகளிடம் பட அப்டேட் கேட்பது வருத்தம் கொள்ள செய்கிறது. ரசிகர்கள் மத்திப்புடன் நடந்துகொள்ள வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

இனி அப்டேட் கேட்க மாட்டோம் தல…. ரசிகர்கள் வைரஸ் போஸ்டர்

இந்நிலையில் அஜித் கோரிக்கையை ஏற்றுள்ள மதுரை அஜித் ரசிகர்கள், இனி அப்டேட் வரும் வரை காத்திருப்போம், உங்கள் வருகைக்கு காத்திருக்கிறோம். உங்கள் வார்த்தைக்கு கட்டுப்படுகிறோம் என குறிப்பிட்டு பிளக்ஸ் பேனர் ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.