பிரியங்கா காந்தி வலுவான எதிராளி என்பதால்தான் மத்திய அரசு அவரை குறிவைக்கிறது- அஜய் மாக்கன் கண்டுபிடிப்பு

பிரியங்கா காந்தி வலுவான எதிராளி என்பதால்தான் மத்திய அரசு அவரை குறிவைக்கிறது- அஜய் மாக்கன் கண்டுபிடிப்பு

ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் அரசு பங்களாவை காலி செய்யும்படி பிரியங்கா காந்திக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியதை காங்கிரஸ் தலைவர் அஜய் மாக்கன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: டெல்லியில் பல மக்கள் இசட் ப்ளஸ் பிரிவு பாதுகாப்பை பெற்றுள்ளனர். ஆகையால் அவர்கள் அனைவரையும் வீட்டை காலி செய்யும்படி நீங்கள் கேட்பீர்களா?

பிரியங்கா காந்தி வலுவான எதிராளி என்பதால்தான் மத்திய அரசு அவரை குறிவைக்கிறது- அஜய் மாக்கன் கண்டுபிடிப்பு

பிரியங்கா காந்தியை மட்டும் ஏன் குறிவைக்கிறீர்கள்? அவர் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் மற்றும் எதிர்கட்சியின் வலுவான குரல் என்பதால்தான் அவர் குறிவைக்கப்படுகிறார். வலுவான எதிர்ப்பு குரலில் எவர் பங்கு வகிப்பாரோ, அந்த மக்கள் குறிவைக்கப்படுவார்கள். மேலும் அவர்கள் வீட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்படுவார்கள். இந்த தொற்றுநோய் சமயத்தில், பிரியங்கா காந்தி மற்றும் அவரது குடும்பத்தினரையும் குறிவைக்க அரசாங்கம் கடுமையாக முயற்சி செய்கிறது.

பிரியங்கா காந்தி வலுவான எதிராளி என்பதால்தான் மத்திய அரசு அவரை குறிவைக்கிறது- அஜய் மாக்கன் கண்டுபிடிப்பு

வீட்டுக்குள் இருக்கும்படி மக்களுக்கு அரசாங்கம் அறிவுரை கூறுகிறது ஆனால் பிரியங்கா காந்தியை தனது அரசாங்க தங்குமிடத்தை ஒரு மாதத்துக்குள் காலி செய்யும்படி சொல்கிறது. வீட்டை மாற்றுவது இரு நபர் பணி அல்ல. பலா் இந்த செயல்பாட்டில் ஈடுபட வேண்டும். இந்த நேரத்தில் பிரியங்கா காந்தி இத்தகைய சூழ்நிலைக்கு வர வேண்டும் என அரசாங்கம் விரும்புகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.