மக்களுக்காக குரல் கொடுப்பதால் பிரியங்கா காந்தி மீது தனிப்பட்ட தாக்குதல்.. பா.ஜ.க. அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

மக்களுக்காக குரல் கொடுப்பதால் பிரியங்கா காந்தி மீது தனிப்பட்ட தாக்குதல்.. பா.ஜ.க. அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

டெல்லியில் லோதி சாலையில் உள்ள பங்களாவில் வசித்து வரும் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் அங்கியிருந்து வெளியேறும்படி பிரியங்கா காந்திக்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டன் தெரிவித்து வருகின்றனர். உத்தர பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லாலு இது தொடர்பாக கூறியதாவது:

மக்களுக்காக குரல் கொடுப்பதால் பிரியங்கா காந்தி மீது தனிப்பட்ட தாக்குதல்.. பா.ஜ.க. அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

மக்களுக்காக குரல் கொடுப்பதும், ஏழைகளுக்காக போராடுவதும், தொழிலாளர்களை பற்றி பேசுவதாலும் பிரியங்கா ஜி குறித்து பா.ஜ.க. அரசுக்கு பதற்றமாக உள்ளது. பல விவகாரங்களில் அரசுக்கு நெருக்கடி கொடுப்பதால், மத்திய அரசு அவர் மீது தனிப்பட்ட தாக்குதல்களை தொடங்கியுள்ளது. முன்பு சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் தனது பாதுகாப்பை மத்திய அரசு திரும்ப பெற்றபோது கூட ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. இந்திரா காந்திஜி ஆட்சியில் இல்லாதபோது அப்போது இருந்த அரசாங்கம் அவருக்கு நெருக்கடி கொடுத்தது. ஆனால் அது கண்டு அவர் பயப்படவில்லை. அவர் பொது பிரச்சினைகளுடன் தொடர்ந்து போராடினார்.

மக்களுக்காக குரல் கொடுப்பதால் பிரியங்கா காந்தி மீது தனிப்பட்ட தாக்குதல்.. பா.ஜ.க. அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உத்தர பிரதேசத்தில் வாழ்வதை பொறுத்தவரை, அது காந்தியின் பழைய வீடு, ஆகையால் அரசால் அவரை வீட்டிலிருந்து வேண்டுமானால் காலி செய்யமுடியும் ஆனால் மக்களின் இதயத்திலிருந்து வெளியேற்ற முடியாது. லக்னோவில் தங்குவாரா அல்லது இல்லையா தொடர்பாக எந்தவொரு விஷயத்தையும் விரைவாக அவர் சொல்வார். அதை எதிர்காலத்தில் அறிந்து கொள்வோம். இவ்வாறு அவர் பேசினார்.