2024ல் மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் 3,500 மசூதிகளை இடித்து விடும்.. அசாம் எம்.பி. சர்ச்சை பேச்சு

2024ல் மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் 3,500 மசூதிகளை இடித்து விடும்.. அசாம் எம்.பி. சர்ச்சை பேச்சு

2024 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதுமாக 3,500 மசூதிகளை இடித்து விடும் என்று அசாம் எம்.பி. ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலம் துப்ரி நாடாளுமன்ற தொகுதியின் கவுரிபூரில் கடந்த புதன்கிழமையன்று ஏ.ஐ.யு.டி.எப். கட்சியின் தேர்தல் பேரணி நடந்தது. அதில் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏ.ஐ.யு.டி.எப்.) கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பத்ருதீன் அஜ்மல் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது: பா.ஜ.க. நாடு முழுவதும் 3,500 மசூதிகளை பட்டியலிட்டுள்ளது.

2024ல் மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் 3,500 மசூதிகளை இடித்து விடும்.. அசாம் எம்.பி. சர்ச்சை பேச்சு
பத்ருதீன் அஜ்மல்

2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி ஆட்சி அமைத்தால் அவை அனைத்தையும் பா.ஜ.க. இடித்து விடும். குர்ஆன் முத்தலாக்கை அனுமதித்தது. ஆனால் நரேந்திர மோடி அரசு அதை ஒழித்தது. பா.ஜ.க. மீண்டும் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால், முஸ்லிம் பெண்கள் புர்கா அணிய முடியாது. என்பதையும், ஆண்கள் நீண்ட தாடியை வளர்க்க முடியாது என்பதையும், பராம்பரியமான தலை தொப்பிகளை அணிய முடியாது என்பதையும் அவர்கள் உறுதி செய்வார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

2024ல் மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் 3,500 மசூதிகளை இடித்து விடும்.. அசாம் எம்.பி. சர்ச்சை பேச்சு
காங்கிரஸ்

அசாமில் முதல்வர் சர்பானந்தா சோனாவால் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டும் எண்ணத்தில் அம்மாநிலத்தில், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, சி.பி.ஐ., சி.பி.ஐ. (எம்), சி.பி.ஐ. (எம்.எல்.) மற்றும் ஏ.ஜி.எம். ஆகிய 5 கட்சிகளுடன் இணைந்து மெகா கூட்டணியை காங்கிரஸ் அமைத்துள்ளது. இந்த கூட்டணி அமைந்த அடுத்த 2 தினங்களில்தான் பத்ருதீன் அஜ்மல் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.