• October
    19
    Saturday

Main Area

Main



லிப்கிஸ் ரொம்ப நல்லது: பிக் பாஸ் பிரபலம் ஓபன் டாக்!

கோப்பு படம்
கோப்பு படம்

சென்னை: லிப்கிஸ் ரொம்ப நல்லது என்று ஐஸ்வர்யா தத்தா வெளிப்படையாகக் கூறியுள்ளார். 

தமிழ் சினிமாவில் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. அதைத்தொடர்ந்து தமிழில் இவர் ஏராளமான படங்கள் நடித்திருந்தாலும் எதுவும் கைகொடுக்கவில்லை. பின்பு பிக் பாஸ் 2வது சீசனில் பங்குபெற்று தனது கடுமையான குணத்தின் மூலம் மக்கள் மனதில் வெறுப்பை சம்பாதித்தார். இருப்பினும் இவருக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளம் ஒன்று இருக்கிறது. 

இவர் தற்போது மஹத்வுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அப்போது லிப்கிஸ் பற்றி பேசியுள்ளார் அவர் கூறியதாவது. 'லிப்கிஸ் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. நான் ரொம்ப ரொமான்டிக் பெர்சன். நீங்கள் எது கொடுத்தாலும் இரண்டு மடங்காகத் திருப்பி கொடுப்பது தான் என் பழக்கம்' என்று கூறியுள்ளார்.

aishwarya dutta

அதைத்தொடர்ந்து உங்களக்கு எந்த நடிகர் மீது க்ரஷ் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'நடிகர் சிம்பு என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும்,அவர் மீது எனக்கு க்ரஷ் இருக்கிறது' என்று கூறியுள்ளார். 
 

2018 TopTamilNews. All rights reserved.