இணையவழி அச்சுறுத்தல்- பாதுகாப்பு தரும் ஏர்டெல் செக்யூர் சேவை அறிமுகம்!

இணையவழி அச்சுறுத்தல்- பாதுகாப்பு தரும் ஏர்டெல் செக்யூர் சேவை அறிமுகம்!

தகவல் தொடர்பு துறை உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களுக்கு இணைய வழி அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் வகையில் செக்யூர் என்ற சேவை பிரிவை ஏர்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

இணையவழி அச்சுறுத்தல்- பாதுகாப்பு தரும் ஏர்டெல் செக்யூர் சேவை அறிமுகம்!
இணையவழி அச்சுறுத்தல்- பாதுகாப்பு தரும் ஏர்டெல் செக்யூர் சேவை அறிமுகம்!

நவீன தொழில்நுட்பத்தின் உதவிகொண்டு தரவு மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இணையவழியாக வரும் அச்சுறுத்தல்களை குறைக்கவும், அவற்றிடம் இருந்து பாதுகாப்பு அளித்திடவும் இந்த செக்யூர் என்ற சேவை நிறுவன பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது.

இணையவழி அச்சுறுத்தல்- பாதுகாப்பு தரும் ஏர்டெல் செக்யூர் சேவை அறிமுகம்!

இந்த சேவையின் மூலம், வர்த்தக வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் பாதுகாப்பு, கிளவுட் டிடிஒஎஸ் பாதுகாப்பு, உள்ளிட்ட பாதுகாப்பு சேவைகளை ஏர்டெல் வழங்கும் என தெரிகிறது. இதற்காக சிஸ்கோ, ரேட்வேர், விஎம்வேர் மற்றும் ஃபோர்ஸ்பாயிண்ட் உள்ளிட்ட நிறுவனங்களுடன் ஏர்டெல் கூட்டு சேர்ந்துள்ளது.

பிளிப்கார்ட், ஹேவல்ஸ், பிடிலிட்டி உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த சேவைக்காக விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ள ஏர்டெல் நிறுவனம், நாடெங்கிலும் உள்ள 10 லட்சம் வர்த்தக வாடிக்கையாளர்கள் இந்த சேவைக்காக விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுத்துள்ளது.

  • எஸ். முத்துக்குமார்