‘ஏர்டெல்’கொடுக்கும் நெருக்கடி! மக்களை சிக்கலில் தள்ளும் ஏஜெண்டுகள்!

 

‘ஏர்டெல்’கொடுக்கும் நெருக்கடி! மக்களை சிக்கலில் தள்ளும் ஏஜெண்டுகள்!

ஈரோடு மாவட்டம், நம்பியூர் வட்டம், கெட்டி செவியூரில், ’கே.எம்.- 6 மொபைல்’ என்ற பெயரில் செல்போன் கடையை , திருப்பூர் மாவட்டம், மலையப்பாளையம் ஊரை சேர்ந்த சுபாஷ் என்பவர் ஓராண்டாக நடத்தி வருகிறார். இவருடைய உறவினர் சரவணன் என்பவர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி சுற்று வட்டார பகுதியில் ஏர்டெல் நிறுவனத்தின் சிம்கார்டு மற்றும் ரீசார்ஜ் ஏஜென்சி

‘ஏர்டெல்’கொடுக்கும் நெருக்கடி! மக்களை சிக்கலில் தள்ளும் ஏஜெண்டுகள்!

எடுத்து நடத்தி வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த இரண்டு மாதங்களாக , கெட்டி செவியூரில் உள்ள சுற்று வட்டார கிராமங்களில் வீடு வீடாக சென்று நீங்கள் வைத்திருக்கும் வோடாபோன், பி.எஸ்.என்.எல் சிம்கார்டுகள் கூடிய விரைவில் செயல் இழந்துவிடும் எனவும், அதனால், அதை உங்களால் பயன்படுத்த முடியாது எனவும் கூறி, உங்கள் சிம் கார்டை ஏர்டெல் நிறுவனத்திற்கு இலவச மாக மாற்றி தருகிறோம் என்று கூறியுள்ளார்கள். இதை நம்பிய பொது மக்களிடம், ஏர்டெல் நிறுவனத்தின் சிம்கார்டுக்கு மொபைல் எண்ணை சட்ட விரோதமாக மாற்றி தந்து உள்ளனர்.

‘ஏர்டெல்’கொடுக்கும் நெருக்கடி! மக்களை சிக்கலில் தள்ளும் ஏஜெண்டுகள்!

இதன் மூலம் வங்கி கணக்குகளில் பதிவு செய்து உள்ள மொபைல் எண்ணை கொண்டு , வங்கிகளில் உள்ள பணத்தை, வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளவர்களின், வங்கி கணக்குகளில் இருந்து அவர்களுக்கே தெரியாமல் எடுக்க செய்யும் வாய்ப்பு உள்ளது. மேலும் அவர்கள் பயன்படுத்தி வரும் ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கையும், WHATSAPP விவரங்கள், ஜிமெயில் கணக்கில் உள்ள அவரது தனிப்பட்ட தொடர்புகள் (CONTACTS, MESSAGES, GMAIL LOGIN ID , PASSWORD, GOOGLE PHOTOS (PERSONAL PHOTOS INCLUDING) WHATS APP CHATS) அனைத்தையும் ஒரே ஒரு மொபைல் எண்ணை கொண்டு பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உங்களது பெயரில் உள்ள சிம்

‘ஏர்டெல்’கொடுக்கும் நெருக்கடி! மக்களை சிக்கலில் தள்ளும் ஏஜெண்டுகள்!

கார்டின் விவரங்கள் வேறு ஒரு நெட்வொர்க்கில் மாறும்பொழுது வேறு நபரின் பெயரில் மாறி இருந்தால் உங்களால் 90 நாட்களுக்கு பின்புதான் உங்கள் பெயரில் வேறொரு நெட்வொர்க் மாற்றி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது அதற்குள்ளாக உங்கள் வங்கிக் கணக்குகளில் இருந்து அல்லது உங்களது தனிப்பட்ட விவரங்கள் அனைத்தும் ஈடுபடக்கூடிய வாய்ப்பு உள்ளது . இதன் விபரம் அறிந்த சிலர் அந்த செல்போன் கடையினை எச்சரித்து வந்துள்ளனர்.

‘ஏர்டெல்’கொடுக்கும் நெருக்கடி! மக்களை சிக்கலில் தள்ளும் ஏஜெண்டுகள்!

இந்நிலையில் இன்று 8-9 -2020 இருவரும் சிம் கார்டு மோசடி புகாரில் சிக்கியுள்ளனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் ஏர்டெல் நிறுவனம் தான், வேறு ஒரு நிறுவனத்தின் பிஎஸ்என்எல்,ஜியோ, வோடபோன் நிறுவனத்தின் சிம் கார்டுகளை தங்களது நிறுவனத்திற்கு மாற்ற வேண்டுமென்றும் மாதத்திற்கு குறிப்பிட்ட சிம்கார்டு களுக்கு மேல் நீங்கள் மாற்றினால் உங்களுக்கு அதிக கமிஷன் தருவதாக கூறியுள்ளதாக கூறுகிறார்கள். எனவே ஏர்டெல் நிறுவனம் இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவது தெரிய வந்தது.

இதுகுறித்து ஏர்டெல் தரப்பில் பேசியபோது, மற்ற நெட்வொர்க் சிம் கார்டுகள் அதிகம் சேல்ஸ் ஆவதாகவும், அதனால் தங்களின் நெட்வொர்க் சிம் கார்டுகளின் விற்பனை குறைந்துள்ளதால், மற்ற நெட்வொர்க்குகளில் உள்ள மொபைல் எண்களை தங்கள் நெட்வொர்க்கு மாற்ற வேண்டும் எனவும், ஒவ்வொரு ஏரியாவிலும் உள்ள ஏர்டெல் செல்போன் டவர்கள் மூலம் வரும் வருவாயை அதிகரிக்கவும் ஏர்டெல் நிறுவனம் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள்.

இதுபோன்ற செயல்களால் ஏர்டெல் நிறுவனத்தின் மீது நம்பிக்கை இழப்பு ஏற்பட ஆரம்பித்துள்ளது வாடிக்கையாளர்களுக்கு.