”தொலைத் தொடர்பு கட்டணங்களை உயர்த்த வேண்டும்” – ஏர்டெல் தலைவர் கோரிக்கை!

 

”தொலைத் தொடர்பு கட்டணங்களை உயர்த்த வேண்டும்” – ஏர்டெல் தலைவர் கோரிக்கை!

தொலைத் தொடர்பு கட்டணங்களை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் கூறியுள்ளார். தற்போதைய தொலைத்தொடர்பு கட்டணங்கள் நிலையானது கிடையாது என்று கூறியுள்ள அவர், சந்தையின் தேவைக்கேற்ப கட்டணங்களை உயர்த்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். எனினும், தாங்கள் மட்டும் தனியாக கட்டணங்களை உயர்த்த மாட்டோம் என்றும், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் தொலைத்தொடர்பு துறை கூட்டமைப்பின் முடிவுகளுக்கு ஏற்ப கட்டண உயர்வு இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

”தொலைத் தொடர்பு கட்டணங்களை உயர்த்த வேண்டும்” – ஏர்டெல் தலைவர் கோரிக்கை!

சீன தொலைத்தொடர்பு நிறுவனங்களின் 5 ஜி தொழில்நுட்ப கருவிகளை இந்தியாவில் அனுமதிப்பது குறித்து உறுதியான முடிவை எடுக்க வேண்டும் எனவும் மிட்டல் தெரிவித்துள்ளார். குறிப்பாக சீனாவின் 5 ஜி தொலைத் தொடர்புக் கருவிகளை இந்தியாவில் அனுமதிப்பதற்கு அரசு தயக்கம் காட்டி வருகிறது. அது குறித்து உடனடியாக முடிவு எடுக்க வேண்டும் . பொதுவாக எல்லா தொழில்நுட்பங்களையும் அனுமதிக்க வேண்டும் என்பதையும் மிட்டல் வலியுறுத்தினார்.

”தொலைத் தொடர்பு கட்டணங்களை உயர்த்த வேண்டும்” – ஏர்டெல் தலைவர் கோரிக்கை!

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு செலுத்த வேண்டிய 18 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவை குறித்து பேசிய அவர், தற்போதைய சூழலில் இவ்வளவு பெரிய தொகையை கொடுப்பது எளிதான விஷயமல்ல என்றும், இது தொடர்பாக இறுதி முடிவு விரைவில் எட்டப்படும் என்றும் குறிப்பிட்டார். 5 ஜி தொலைத்தொடர்பு சேவைக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள ஸ்பெக்ட்ரம் விலை மிக அதிகமானது என்றும் குறிப்பிட்ட அவர், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் 5ஜி தொழில்நுட்பத்துக்கு மிக வேகமாக மாறிவருகின்றன. அப்படியான ஒரு நிலை இந்தியாவில் இல்லை. ஆனால் இதர தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப 5 ஜி தொழில்நுட்பம் வளரும் எனவும் கூறினார்.

”தொலைத் தொடர்பு கட்டணங்களை உயர்த்த வேண்டும்” – ஏர்டெல் தலைவர் கோரிக்கை!

குறிப்பாக, கார் தொழில்நுட்பம், ரோபோட்டிக் மற்றும் தானியங்கி துறையின் வளர்ச்சிக்கு ஏற்ப 5 ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் வேகமெடுக்கும் எனவும் கூறினார். இதர தொழில்நுட்பங்கள் வளராமல் 5ஜி தொழில்நுட்பம் மற்றும் தனியாக வளராது என்றும் குறிப்பிட்டுள்ளார். ஏர்டெல் தற்போது 3ஜி தொழில்நுட்பத்தை முற்றாக நிறுத்த உள்ளது என்றும், 2 ஜி சேவையில் உள்ள வாடிக்கையாளர்களை 4 ஜி சேவைக்கு நேரடியாக மாற்றும் பணியை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

”தொலைத் தொடர்பு கட்டணங்களை உயர்த்த வேண்டும்” – ஏர்டெல் தலைவர் கோரிக்கை!

கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு நிகழ்ச்சியில் பேசிய மிட்டல், 16 ஜிபி டேட்டா 160 ரூபாய் விலைக்கு கொடுக்க வேண்டியது குறித்து வருத்தங்களை தெரிவித்திருந்த, அவர் இந்த விலையில் 1.5 ஜி.பி டேட்டா மட்டுமே அளிக்க வேண்டும் என கூறியிருந்தது குறிப்பிட்டிருந்தது. ஒரு பயனரிடமிருந்து கிடைக்கும் 200 ரூபாய் வருமானத்தை 300 ரூபாயாக உயர்த்த வேண்டிய தேவை உள்ளது. அதற்கேற்ப வர்த்த நடைமுறை மேம்படுத்த வேண்டும் எனவும் மிட்டல் கூறியிருந்தார். ஆனால் பார்தி ஏர்டெல் நிறுவனம், செப்டம்பர் காலாண்டில், ஒரு பயனரிடமிந்து 162 ரூபாய் மட்டுமே மாத வருமானம் பெற்றுள்ளது. நடப்பு நிதியாண்டின் இரண்டாவது நிதியாண்டில் 128 ரூபாயாகவும், முதல் காலாண்டில் 157 ரூபாயாகவும் தனிநபர் இருந்தது குறிப்பிடத்தக்கது.