நொடிக்கு 1 ஜிபி டவுன்லோடிங் ஸ்பீட்; ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெலின் அதிரடி பிளான்!

 

நொடிக்கு 1 ஜிபி டவுன்லோடிங் ஸ்பீட்; ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெலின் அதிரடி பிளான்!

இந்தியாவின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் தொடர்ந்து பல ஆபர் அறிவிப்புகளை வெளியிட்டுவருகிறது. தனது போட்டி நிறுவனமான ஜியோவை வீழ்த்த பல்வேறு வழிகளில் முயற்சிசெய்து வருகிறது. அப்படி ஒரு பிளானை தான் தற்போது அறிவித்துள்ளது.

ஒரு காலத்தில் 40kb/s பதிவிறக்க வேகத்தில் (downloading speed) இணையத்தைப் பயன்படுத்திய நம்மால் தற்போது 12mb/s வேகத்தில் கூட பயன்படுத்த மனம் வருவதில்லை. அதற்கு மேலும் இணைய வேகம் இருக்க வேண்டும் என்கிறோம்.

நொடிக்கு 1 ஜிபி டவுன்லோடிங் ஸ்பீட்; ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெலின் அதிரடி பிளான்!

இதனைக் குறிவைத்து பைபர் பிளான்களை ஜியோ களமிறக்கியது. ஒவ்வொரு விலைக்கும் அதற்குண்டான இணைய வேகத்தையும் (Rs.1499 – 300 mp/s) குறிப்பிட்டு பைபர் பிளான்களை அறிமுகப்படுத்தியது.

தற்போது அதற்குப் போட்டியாக ஏர்டெல் நிறுவனம், 3,999 ரூபாய்க்கு (1 மாதம்) அன்லிமிடெட் இன்டர்நெட்டுடன் 1GB/s இணைய வேகத்தைக் கொண்ட பிளானை ( Airtel Xstream Fiber ) அறிமுகப்படுத்தியுள்ளது. காம்பிளிமென்ரியாக வைபை ரூட்டரையும் வாங்கிக்கொள்ளுமாறு பயனர்களிடம் கூறியுள்ளது.

டிஜிட்டல் நிறுவனங்கள், பங்குச்சந்தையில் தினமும் வர்த்தகம் (day trading) செய்பவர்கள், ஆன்லைன் வகுப்புகள் படிப்பவர்கள் உள்ளிட்ட அதிக இணைய வேகம் தேவைப்படுபவர்களைக் குறிவைத்து இத்திட்டத்தை அறிமுகம் செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

நொடிக்கு 1 ஜிபி டவுன்லோடிங் ஸ்பீட்; ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெலின் அதிரடி பிளான்!

இந்த பைபர் பாக்ஸ் 550 டிவி சானல்கள், அமேசான் பிரைம் உள்ளிட்ட ஒடிடி தளங்களை உள்ளடக்கியுள்ளது. இதன்மூலம் 10 ஆயிரம் படங்களைக் கண்டுகளிக்கலாம். இந்தத் திட்டம் அமேசான் பிரைம் வீடியோ, ZEE5 சந்தாவையும் வழங்குவது குறிப்பிடத்தக்கது.