• December
    15
    Sunday

Main Area

Main



சுப்ரீம் கோர்ட் உத்தரவால்... மூடப்படும் தருவாயில் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள்.. ஜனவரி மாதம் வரை கெடு!

vodafone with airtel
vodafone with airtel

சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பால் ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் கடனில் சிக்கி மூடப்படும் தருவாயில் இருக்கின்றன.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் புதிய தொலை தொடர்பு நிறுவனம் ஜியோ தொடங்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்த பிறகு, அந்நிறுவனம் அளித்த பல இலவச சலுகைகளால் அனைத்து பயனர்களும் அந்நிறுவனம் நோக்கி செல்லத் துவங்கினர். இதனால் பல சிறிய தொலைதொடர்பு நிறுவனங்கள் மூடப்பட்டன. மிகப்பெரிய அளவில் இருந்து வந்த ஏர்செல், டொகோமோ நிறுவனங்களும் தாக்கு பிடிக்க முடியாமல் மூடப்பட்டன. 

வோடபோன் நிறுவனம் ஐடியா நிறுவனத்துடன் இணைந்து தனது சேவையை கொடுத்து வந்தது. இந்நிலையில் நிதி நெருக்கடி காரணமாக விரைவில் வோடபோன் நிறுவனம் மூடப்படும் என்ற தகவல்கள் வெளிவந்தன. இதற்கிடையில் தற்போது இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமாக இருந்து வரும் ஏர்டெல் நிறுவனமும் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றன.

செல்போன் நிறுவனங்கள் இந்தியாவில் 2 வகையான கட்டணங்களை மத்திய டெலிபோன் துறைக்கு செலுத்த வேண்டும். அதாவது உரிமம் கட்டணம், அலைக்கற்றை கட்டணம் என செலுத்த வேண்டும். செல்போன் நிறுவனங்களின் செயல்பாடு அடிப்படையில் இந்த இரு கட்டணங்களும் நிர்ணயிக்கப்படும். 

மத்திய டெலிபோன் துறை செல்போன் நிறுவனங்கள் விற்கும் போன்கள், பங்கு சந்தை வருமானங்கள், பழைய பொருட்களை விற்பதன் மூலம் கிடைக்கும் வருமானங்கள் என அனைத்தையும் கணக்கிட்டு கட்டணங்களை நிர்ணயித்தது. ஆனால் தகவல் தொடர்பு நிறுவனங்கள் தங்களுக்கு வந்த தகவல் தொடர்பு சேவை வருவாயை மட்டுமே கட்டி வந்தது.

மத்திய அரசின் இந்த அதிரடி கட்டண நிர்ணயத்தை சமாளிக்க இயலால் சுமார் 15-க்கும் மேற்பட்ட சிறிய தகவல் தொடர்பு நிறுவனங்கள் மூடப்பட்டன. முன்னணியில் இருக்கும் நிறுவனங்களும் நிர்ணயித்த கட்டணத்தை கட்டாமல் சேவை வருவாயை மட்டுமே கட்டி வந்தனர். 

vodafone with airtel

மத்திய அரசு தகவல் தொடர்பு நிறுவனங்களுக்கு நிலுவையில் இருக்கும் பணத்தை விரைவில் கட்டக்கோரி நோட்டீஸ் அனுப்பியது. மத்திய அரசு நோட்டீசையும் பொருட்படுத்தாமல் செயல்பட்டு வந்ததால் சுப்ரீம் கோர்ட்டில் கட்டணங்கள் கட்ட தவறிய நிறுவனங்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. 

இந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம் மத்திய அரசு நிர்ணயித்த கட்டணத்தை மூன்று மாத காலத்திற்குள் கட்ட வேண்டும். அவ்வாறு கட்டவில்லை என்றால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தீர்ப்பளித்தது.

சுமார் 16 ஆண்டுகளாக கட்டாமல் விட்ட கட்டணங்கள், அதற்கு வட்டி, கட்டத் தவறிய பணத்திற்காக அபராதம் என அனைத்தையும் சேர்த்து பல்லாயிரம் கோடி ரூபாய் நிலுவையில் இருக்கிறது. அந்த வகையில் வோடாபோன் நிறுவனம் ரூ.46,150 கோடியும், ஏர்டெல் நிறுவனம் ரூ. 28,450 கோடியும் கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

vodafone with airtel

கடந்த காலாண்டில் மட்டும் வோடபோன் நிறுவனம் 50 ஆயிரம் கோடிக்கு மேல் நஷ்டம் அடைந்து இருக்கின்றன என்றும், ஏர்டெல் நிறுவனம் சுமார் 25 ஆயிரம் கோடி நஷ்டம் அடைந்து இருப்பதாகவும் கணக்குகளை காட்டியது. தற்போது உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவினால் மேலும் நஷ்டத்திற்கு தள்ளப்பட்டு நிறுவனத்தை மூடும் நிலைக்கு செல்ல இருப்பதாக அந்த நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன. 

விரைவில் மத்திய அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு சலுகை அளிக்கும் படியும், விலக்கு அளிக்கும் படியும் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

2018 TopTamilNews. All rights reserved.