கொரோனா தடுப்பு மருந்தை கொண்டு செல்ல தயாராகும் விமான நிலையங்கள்!

 

கொரோனா தடுப்பு மருந்தை கொண்டு செல்ல தயாராகும் விமான நிலையங்கள்!

கொரோனா தடுப்பு மருந்தினை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர பிரிட்டன். பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் அனுமதி அளித்துள்ள நிலையில், அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் விரைவில் அனுமதி அளிக்க உள்ளன.

கொரோனா தடுப்பு மருந்தை கொண்டு செல்ல தயாராகும் விமான நிலையங்கள்!

ஃபைஸர் நிறுவனம் தயாரித்துள்ள மருந்துக்கு இந்த அனுமதி கிடைத்துள்ள நிலையில், உலகின் பல்வேறு மருந்து நிறுவனங்களும் மருந்தினை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரும் இறுதிகட்ட முயற்சியில் உள்ளன. இந்த நிலையில், இந்த மருந்துகளை ஒவ்வொரு நாடுகளும் பகிர்ந்து கொள்ள திட்டமிட்டுள்ளன. இதற்கு ஏற்ப கொரோனா தடுப்பு மருந்தை கொண்டு செல்வதற்கான கட்டமைப்பு உருவாக்குவது நாடுகளில் புதிய தேவையாக உருவாகியுள்ளது.

கொரோனா தடுப்பு மருந்தை கொண்டு செல்ல தயாராகும் விமான நிலையங்கள்!

கொரோனா தடுப்பு மருந்தினை, மைனஸ் 70 டிகிரி செல்சியசில் கொண்டு செல்ல வேண்டும். அப்போதுதான் அந்த மருந்தின் வீரியம் இருக்கும். மருந்து தயாரிக்கும் இடத்தில் இருந்து. ,கொண்டு செல்லும் இடம் வரை இந்த சீதோஷ்ண நிலையை பராமரிக்க வேண்டும். இதற்கு ஏற்ப, அதுபோன்ற கட்டிடங்கள், வாகனங்கள், பெட்டிகளை தயாரிக்கும் அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. சரக்கு விமானங்களில் அதுபோன்ற அறைகளை உருவாக்குவதுதான் பெரிய சவாலாக உள்ளது. விமான நிறுவனங்கள் அவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன.

இந்த நிலையில், இந்தியாவின் ஹைதராபாத் விமான நிலையம், டெல்லி விமான நிலையங்களில் அந்த கட்டமைப்பை உருவாக்கியுள்ளதாக, அந்த விமான நிலையங்களை இயக்கும் ஜிஎம்ஆர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விமான நிலையங்களில், கொரோனா தடுப்பு மருந்துகளை கொண்டு வரும் சரக்கு விமானங்களை, நேரடியாக பிரத்யேக சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது. அங்கிருந்து குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். மத்திய அரசு துரித கதியில் இதற்கான வேலைகளை செய்து வரும் நிலையில், விமானநிலையங்களும் தயாராகி வருவது நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.