• March
    29
    Sunday

Main Area

Main



விமான நிலையங்களில் தமிழில் அறிவிப்பு! வைகோவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சபாநாயகர்!

விமான நிலையம்
விமான நிலையம்

தமிழகத்தில் விமான நிலையங்களில் செய்யப்படுகின்ற முக்கிய அறிவிப்புகள் ஆங்கிலத்திலும், இந்தியிலும் தான் சொல்லப்படுகின்றன. நாடு முழுவதுமே வெளிநாட்டிற்கு பயணிக்கும் விமானங்களில் மட்டுமல்லாது, உள்நாட்டில் செல்லும் விமானங்களிலும் அந்தந்த மாநிலங்களின் மொழிகளில் அறிவிப்பு செய்யப்படாமல் இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே செய்யப்படுகின்றன. இது குறித்து இன்று மக்களவையில் வைகோ உரையாற்றி கோரிக்கை வைத்தார். 

vaiko

மதிமுக பொதுச் செயலாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான வைகோ இன்று உரையாற்றிய போது, தமிழகத்தில் இருந்து பல இளைஞர்கள் அரபு நாடுகளில் வேலைக்குச் செல்வதற்காக விமானத்தைப் பயன்படுத்துகிறார்கள். இப்படி எளிய மக்கள் பயன்படுத்தும்படி விமான சேவை மாறினாலும், நாடு முழுவதும் விமான நிலையங்களில் அறிவிப்புகள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே உள்ளன. மாநிலங்களுக்கு உள்ளேயே பயணிக்கும் விமானங்களிலும் இரு மொழி அறிவிப்பு தான் கொடுக்கப்படுகிறது. அவசர கால அறிவிப்புகள் கூட இந்த இரு மொழிகளில் மட்டுமே சொல்லப்படுகின்றன. சிங்கப்பூரிலும், மலேசியாவிலும் உள்ள விமான நிலையங்களில் தமிழில் அறிவிப்புகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால், இந்தியாவில் அப்படியொரு நிலை இல்லை. இனி எந்த மாநிலத்திலிருந்து ஒரு விமானம் புறப்படுகிறதோ அந்த மாநிலத்தின் மொழியிலும் அறிவிப்புகள் கொடுக்கப்பட வேண்டும் என்று கூறினார். 

venkaya naidu

பின்னர் இதற்கு பதிலளித்து பேசிய துணை குடியரசுத் தலைவரும், மாநிலங்களவை சபாநாயகருமான வெங்கையா நாயுடு, “வைகோ, சொல்வது மிக முக்கியமான கோரிக்கையாகும். இதை மற்ற உறுப்பினர்களும் ஏற்கிறீர்களா?,” எனக் கேட்டார். அதற்குப் பெரும்பான்மையானவர்கள் ஆதரவு தெரிவிக்கவே, மத்திய அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெங்கையா, வலியுறுத்தினார்.

2018 TopTamilNews. All rights reserved.