• February
    24
    Monday

Main Area

Main



"எங்கம்மா சத்தியமா நான் தப்பிச்சு போகலய்யா" என கதறியும் நம்பாத விமான நிலைய அதிகாரிகள்

Not Allowed to Board
Not Allowed to Board

ரொம்ப அதிகம் இல்ல, ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு நிறுவனத்தோட ஆண்டு வருமானம், 25,000 கோடி ரூபாய், லாபம் 630 கோடி ரூபாய். ஒரு கோடி ரெண்டு கோடி இல்லை, 630 கோடி ரூபாய். மாசம் 50,000 ரூபாய் சம்பளம் வாங்குபவர் இந்த 630 கோடியை சம்பாதிக்க பத்தாயிரம் வருடங்கள் உழைக்க வேண்டியிருக்கும். அவ்வளவு லாபம் நேற்று, ஆனால் இன்றைக்கு? இருபது விமானங்களோடு இந்தியாவின் மிகச்சிறந்த தனியார் விமான நிறுவனமாக, உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பறந்துவந்த, ஜெட் ஏர்வேஸின் நிறுவனர் நரேஷ் கோயல் கிளம்ப இருந்த விமானத்தில் இருந்து கீழே இறக்கி விடப்பட்டிருக்கிறார்.

Jet Airways

நிறுவனத்தின் வருமானத்தை 25,000 கோடி ரூபாயாக கொண்டிருந்த ஜெட் ஏர்வேஸ், கூடவே ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களுக்கு கடனையும் வைத்திருந்தது. கடைசியாக, வெறும் 400 கோடி ரூபாயை உடனடியாக புரட்ட முடியாததால், தன் ஆயுளை (தற்காலிகமாக) நிறுத்திவிட்டது ஜெட் ஏர்வேஸ். பணிபுரிந்த 16,000 சொச்ச ஊழியர்கள் மட்டுமல்ல, கோடிக்கணக்கான ரூபாய்க்கு தற்போதும் அதிபதியாக இருக்கும் நரேஷ் கோயல் வாழ்க்கையும் ரணகளறியாகத்தான் இருக்கிறது.

Naresh Goyal

கெடக்குறது கெடக்கட்டும், கெழவிய தூக்கி மனையில உட்கார வைங்கிற கதையா, நரேஷ் கோயலும் அவர் மனைவி அனிதாவும் துபாய் செல்வதற்காக (சம்மர் வக்கேஷன் போல) நேற்று மும்பையில் ஒருகாலத்தில் போட்டி நிறுவனமாக இருந்த வேறொரு நிறுவனத்தின் விமானத்தில் அமர்ந்திருக்கின்றனர். விமானம் கிளம்ப எத்தனித்தபோது, விமானம் குடியுரிமை அதிகாரிகளால் நிறுத்தப்படுகிறது. ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகளுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிலுவையில் இருக்கிறது. விஜய் மால்யா, லலித் மோடி என பலரும் வெளிநாடு தப்பிச்சென்றுவிட்ட‌ இந்நேரத்தில் நரேஷ் கோயலும் மனைவியுடன் வெளிநாடு செல்வது அதிகாரிகள் கண்களை உறுத்தவே, விமானித்தில் இருந்து இருவரும் இறக்கி விடப்பட்டுள்ளனர். கோயல் தம்பதிகளின் எதிர்ப்புக்கெல்லாம் யாரும் மசிந்து கொடுப்பதாக தெரியவில்லை. வாழ்க்கை ஒரு வட்டம், மேலே போனவன் கீழே வருவான் என்பதெல்லாம் உண்மைதான். அதுக்காக வானத்து மேலேயே பறந்துகொண்டிருந்தவரை இன்றைக்கு பறக்கவே முடியாத அளவுக்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது காலம்.

2018 TopTamilNews. All rights reserved.