விமான நிறுவனங்களுக்கு ரூ.21,866 கோடி வருவாய் இழப்பு விமான போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்!

 

விமான நிறுவனங்களுக்கு ரூ.21,866 கோடி வருவாய் இழப்பு விமான போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்!

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், இந்திய விமான நிறுவனங்களுக்கு 21 ஆயிரத்து 866 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

மாநிலங்களைவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி இத்த தகவலை தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், விமான நிறுவனங்களின் வருவாய் 3 ஆயிரத்து 651 கோடி என்றளவுக்கு 85,7 சதவீதம் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

விமான நிறுவனங்களுக்கு ரூ.21,866 கோடி வருவாய் இழப்பு விமான போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்!

அதன்படி, கடந்த 2019ம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் விமான நிறுவனங்களின் வருவாய், 25 ஆயிரத்து 517 கோடியாக இருந்த நிலையில், நடப்பாண்டின் அதே காலாண்டில், 21 ஆயிரத்து 866 கோடி குறைந்து, 3 ஆயிரத்து 651 கோடியாக குறைந்துள்ளது. இது 85.7 சதவீதம் குறைவாகும் என அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 25 முதல் மே 24 வரை விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாகவும், அதன் பிறகு பல கட்டுப்பாடுகளுடன், தேர்ந்தெடுத்த சில தடங்களில் மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்டதாலும் இந்திய விமான நிறுவனங்களுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

அதேப்போல ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலக்கட்டத்தில் விமான நிறுவனங்களில் மொத்தம் 5 ஆயிரத்து 298 ஊழியர்கள் வேலை இழந்துள்ளதும் தெரியவந்துள்ளது. ஏப்ரலுக்கு முன்பு வரை விமான நிறுவனங்களில் மொத்தம் 74 ஆயிரத்து 887 ஊழியர்கள் பணிபுரிந்து வந்த நிலையில், அந்த எண்ணிக்கை 7.07 சதவீதம் குறைந்து 69 ஆயிரத்து 589 ஆக குறைந்துள்ளதாக ஹர்தீப் சிங் புரி மேலும் தெரிவித்துள்ளார்.