”பண்டிகைகள் எதிரொலி – விமான டிக்கெட் புக்கிங் 20 % உயர்வு”

 

”பண்டிகைகள் எதிரொலி – விமான டிக்கெட் புக்கிங் 20 % உயர்வு”

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலத்தை முன்னிட்டு விமான டிக்கெட் முன்பதிவு 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் உள்நாட்டு விமான சேவை மட்டும் தொடங்கப்பட்ட நிலையில், கொரோனா அச்சம் காரணமாக. மிகப்பெரிய அளவில் விமான டிக்கெட் முன்பதிவு நடைபெறவில்லை என கூறப்படுகிறது.

”பண்டிகைகள் எதிரொலி – விமான டிக்கெட் புக்கிங் 20 % உயர்வு”

இந்நிலையில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலத்தை முன்னிட்டு விமான டிக்கெட் புக்கிங் 20 சதவீதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து மேக்மை டிரிப் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி விபுல் பிரகாஷ் கூறுகையில், நவம்பர் 6ம் தேதி முதல் 16ம் தேதி வரையிலான தேதிகளில் பயணிப்பதற்கான முன்பதிவு அதிகளவில் நடைபெற்றுள்ளது. குறிப்பாக கடந்த காலத்தோடு ஒப்பிடுகையில் விமான டிக்கெட் புக்கிங் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் டெல்லி, பெங்களூரு மற்றும் பாட்னா ஆகிய இடங்களுக்கு அதிகம் புக்கிங் நடைபெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

”பண்டிகைகள் எதிரொலி – விமான டிக்கெட் புக்கிங் 20 % உயர்வு”

அதேப்போல யாத்ரா டாட் காம் நிறுவனத்தின் தகவல் செய்திதொடர்பாளர் ஒருவர் கூறுகையில், கோவா, வாரனாசி, உத்தரகண்ட் மற்றும் இமாச்சல பிரதேசம் போன்ற சுற்றுலா தளங்களுக்கான புக்கிங் குறித்த விசாரணைகள் 32 சதவீதம் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார். பொது முடக்கம் காரணமாக முடங்கி கிடந்த மக்கள், பண்டிகை காலத்தை முன்னிட்டு சுற்றுலா செல்ல ஆர்வம் காட்ட தொடங்கி உள்ளனர் என்பதையே இது காட்டுவதாக கூறிய அவர், காட்டேஜ்கள், 4 மற்றும் 5 நட்சத்திர விடுதிகளிலும் புக்கிங் விசாரணை அதிகளவில் வருவதாக அவர் தெரிவித்தார்.

”பண்டிகைகள் எதிரொலி – விமான டிக்கெட் புக்கிங் 20 % உயர்வு”

மற்றொரு நிறுவனமான ஈஸ் மை டிரிப் நிறுவனத்தின் நிறுவனர் நிஷாந்த் பிட்டி கூறுகையில், விமான டிக்கெட் புக்கிங் அதிகரித்துள்ளதன் காரணமாக, கொரோனா காலத்துக்கு முன்பு இருந்த டிக்கெட் முன்பதிவு அளவில் 65 சதவீத அளவை அடைந்துவிட்டோம் என்றார். மேலும் அடுத்த 30 முதல் 45 நாட்களுக்குள் கூடுதலாக 10 சதவீதம் முன்பதிவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

  • எஸ். முத்துக்குமார்