“பறக்கும்போதே 48 பைலட்டுகளுக்கு பறந்த டிஸ்மிஸ் ஆர்டர்” – ‘ஏர் இந்தியா’ விமானத்தில் ஏர் இல்லாமல் பஞ்சராகி போனது .

“பறக்கும்போதே 48 பைலட்டுகளுக்கு பறந்த டிஸ்மிஸ் ஆர்டர்” –  ‘ஏர் இந்தியா’ விமானத்தில் ஏர் இல்லாமல் பஞ்சராகி போனது .

பொருளாதார நெருக்கடியால் பல நிறுவனங்கள் நிதியில்லாமல் பலரை வேலையை விட்டு அனுப்பி வருகின்றன .அதுவும் இந்த கொரானா வைரஸ் பரவிய ஊரடங்குக்கு பிறகு பல நிறுவங்களின் நிதி நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது .இந்நிலையில் நிதி சிக்கலில் பல ஆண்டுகளாவே தடுமாறி வரும் ‘ஏர் இந்தியா’ விமான நிறுவனம் அதிரடியாக நேற்று ஒரே இரவில் 48 பைலட்டுகளை வேலையை விட்டு தூக்கியது .வேலை நீக்கம் செய்யப்பட்ட பலர் அப்போது விமானத்தில் விமானம் ஓட்டிக்கொண்டிருந்தார்கள் .

“பறக்கும்போதே 48 பைலட்டுகளுக்கு பறந்த டிஸ்மிஸ் ஆர்டர்” –  ‘ஏர் இந்தியா’ விமானத்தில் ஏர் இல்லாமல் பஞ்சராகி போனது .
நேற்று நடந்த சிவில் விமான போக்குவரத்து துறையின் அதிகாரிகள் கூட்டத்தில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .வேலை நீக்கம் செய்யப்பட்ட சிலரிடம் ஏற்கனவே அந்நிறுவனம் ராஜினாமா கடிதங்களை வாங்கி வைத்து ,பிறகு அதை மறுபரிசீலனை செய்து அவர்களைபணியில் அமர்த்தியது .இப்போது அவர்களை மீண்டும் வேலையை விட்டு போக சொல்லியது அவர்களுக்கு பேரிடியாக தலையில் விழுந்துள்ளது .
அதில் பாதிக்கப்பட்ட ஒரு விமானி கூறுகையில் ,இப்படி திடீரென இந்த கொரானா காலத்தில் வேலையை விட்டு போக சொன்னால் நாங்கள் எங்கு போவது ,என்ன செய்வது ,எங்களின் குடும்ப நிலையை கருத்தில் கொண்டு அரசு இந்த முடிவை பரிசீலனை செய்யவேண்டும் என்று கூறினார்கள் .
ஆனால் விமான நிறுவனம் இப்போது இந்த 48 பேரை நீக்கியது வெறும் ட்ரைலர்தான் ,ஆனால் இன்னும் பலரை விரைவில் நீக்கவுள்ளதாகவும் இதற்க்கு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க நிதி நிலைமை இடம் கொடுக்கவில்லை என்று கூறியது .

“பறக்கும்போதே 48 பைலட்டுகளுக்கு பறந்த டிஸ்மிஸ் ஆர்டர்” –  ‘ஏர் இந்தியா’ விமானத்தில் ஏர் இல்லாமல் பஞ்சராகி போனது .