பிரதமர் மோடிக்காக வாங்கப்பட்ட பி777 விமானம் செப்டம்பரில் டெலிவரி!

 

பிரதமர் மோடிக்காக வாங்கப்பட்ட பி777 விமானம் செப்டம்பரில் டெலிவரி!

பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்காக இந்திய அரசு வாங்கியுள்ள பி777 போயிங் விமானம் வருகிற செப்டம்பர் மாதத்துக்குள் டெலிவரி செய்யப்பட்டுவிடும் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.
தற்போது வரை ஏர் இந்தியா மற்றும் விமானப்படை விமானத்தையே பிரதமர், குடியரசுத் தலைவர் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு மாற்றாக பிரதமர், குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் பயணம் செய்ய பிரத்தியேக விமானங்களை வாங்குவது என்று மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்தது.

பிரதமர் மோடிக்காக வாங்கப்பட்ட பி777 விமானம் செப்டம்பரில் டெலிவரி!

பிரதமர் பயணம் மேற்கொள்ளும் விமானம் என்பது அமெரிக்க அதிபர் விமானம் போல பிரம்மாண்டமாக, அனைத்து வசதிகளும் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டு அதற்கு ஏற்றவகையில் போயிங் நிறுவனம் விமானத்தை தயாரித்து வருகிறது. அடுத்த மாதம் (ஜூலை) விமானத்தை ஒப்படைப்பதாக போயிங் நிறுவனம் கூறியிருந்தது. ஆனால்,
கோவிட் பாதிப்பு காரணமாக விமானத்தை இந்தியாவிடம் வழங்க சிறிது தாமதம் ஆனது. மேலும், இந்த நேரத்தில் இந்தியா அதிக செலவு செய்து விமானத்தை வாங்குகிறது என்பது நெகட்டிவாக செல்லக்கூடும் என்பதால் விமானத்தை பெற்றுக்கொள்வதில் மத்திய அரசுக்கும் தயக்கம் உள்ளதாக போயிங் நிறுவனத்திடம் கூறப்பட்டுள்ளது. இதனால் இரண்டு விமானங்களும் செப்டம்பர் மாதத்தில்தான் டெலிவரி செய்யப்படும் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

பிரதமர் மோடிக்காக வாங்கப்பட்ட பி777 விமானம் செப்டம்பரில் டெலிவரி!தற்போது குடியரசுத் தலைவர், துணைத் தலைவர், பிரதமர் ஆகியோர் ஏர் இந்தியாவின் பி747 விமானத்தை பயன்படுத்தி வருகின்றனர். பிரதமர் பயன்படுத்தாத போது அந்த விமானம் பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. பிரதமர், குடியரசுத் தலைவர் ஆகியோருக்கு பிரத்தியேகமாக பயன்படுத்தும் வகையில் புதிய விமானங்கள் வாங்கப்படுவதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.