கொரோனா நெகட்டிவ் ரிப்போர்ட் இருந்தால் மட்டுமே அனுமதி… ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உறுதி

கொரோனா நெகட்டிவ் ரிப்போர்ட் இருந்தால் மட்டுமே அனுமதி… ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உறுதி

கொரோனா நெகட்டிவ் ரிப்போர்ட் இருப்பவர்களுக்கு மட்டுமே விமானத்தில் அனுமதி வழங்கப்படும் என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்லும் பயணிகளுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஸ்டிரிக்ட் உத்தரவை பிறப்பித்துள்ளது.
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சென்னை, திருச்சி உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு விமானங்கள்

கொரோனா நெகட்டிவ் ரிப்போர்ட் இருந்தால் மட்டுமே அனுமதி… ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உறுதி

இயக்கப்படுகின்றன. நாளை தொடங்கி வருகிற 31ம் தேதி வரை தமிழகத்தில் இருந்து மட்டும் ஏழு விமானங்கள் இயக்கப்படுகின்றன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா நெகட்டிவ் ரிப்போர்ட் வைத்திருக்க வேண்டும் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவித்துள்ளது.

கொரோனா நெகட்டிவ் ரிப்போர்ட் இருந்தால் மட்டுமே அனுமதி… ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உறுதி

பயணம் மேற்கொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் ஐ.சி.எம்.ஆர் அங்கீகரித்த ஆய்வுக் கூடத்தில் பி.சி.ஆர் பரிசோதனை செய்து, அதன் அச்சிடப்பட்ட அறிக்கையைக் கையில் வைத்திருக்க வேண்டும். இந்த பரிசோதனையானது விமானம் புறப்படுவதற்கு 96 மணி நேரத்துக்கு முன்பு செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

ஏற்கனவே விசிட் விசா, சுற்றுலா விசாவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்ல ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.