டெல்டா பிளஸ் கொரோனா உயிரிழப்பை ஏற்படுத்துமா? எய்ம்ஸ் இயக்குநர்

 

டெல்டா பிளஸ் கொரோனா உயிரிழப்பை ஏற்படுத்துமா? எய்ம்ஸ் இயக்குநர்

உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் வகை வைரஸ் வேகமாகப் பரவும், அதிகமான உயிரிழப்பை ஏற்படுத்தும் என்பதற்கு போதுமான தரவுகள் இல்லை என எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

டெல்டா பிளஸ் கொரோனா உயிரிழப்பை ஏற்படுத்துமா? எய்ம்ஸ் இயக்குநர்

டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா, “டெல்டா பிளஸ் கொரோனா தொற்று வேகமாக பரவும் என்பதை உறுதி செய்ய கூடுதல் தரவுகள் தேவை. மேலும், கொரோன தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிவது, தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்டவற்றை மக்கள் தொடர்ந்து தீவிரமாகப் பின்பற்றினால், அடுத்தடுத்து புதிதாக உருவாகும் உருமாற்ற வைரஸ்களிடம் இருந்தும் தற்காத்துக் கொள்ளலாம்.

கொரோனா வைரஸ்ச் தடுப்பு பணிகளில் சிக்கி ஏராளமான மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த ஓர் ஆண்டுகளில் ஏராளமான மருத்துவர்கள் உயிர் தியாகம் செய்துள்ளனர். அவர்களை நினைவில் கொண்டு, மீண்டும் அதுபோன்ற சூழல் உருவாகாமல், கொரோனா பரவலுக்கு வழி வகுக்காமல் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளவேண்டும் தெரிவித்தார்.