பாபர் மசூதி இருந்தது, உள்ளது மற்றும் இருக்கும்…. பரபரப்பை ஏற்படுத்திய அசாதுதீன் ஓவைசியின் டிவிட்

பாபர் மசூதி இருந்தது, உள்ளது மற்றும் இருக்கும்…. பரபரப்பை ஏற்படுத்திய அசாதுதீன் ஓவைசியின் டிவிட்

அயோத்தியில் நேற்று ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நேற்று சிறப்பாக நடந்தது. அதேசமயம் அந்த விழா நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஓவைசி டிவிட்டரில் பதிவு செய்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அயோத்தியின் மரபுலிருந்து பாபர் மசூதி சம்பவத்தை அழிக்க முடியாது என ஓவைசி தெரிவித்தார்.

பாபர் மசூதி இருந்தது, உள்ளது மற்றும் இருக்கும்…. பரபரப்பை ஏற்படுத்திய அசாதுதீன் ஓவைசியின் டிவிட்

அசாதுதீன் ஓவைசி டிவிட்டரில், பாபர் உயிருடன் உள்ளார் என்ற ஹேஸ்டேக்குடன், பாபர் மசூதி இருந்தது, உள்ளது மற்றும் இருக்கும் என டிவிட் செய்து இருந்தார். அதனுடன் மசூதியின் பழைய படத்தையும், பாபர் மசூதி இடிப்பு சம்பவ படத்தையும் இணைத்து பதிவேற்றம் செய்து இருந்தார். இது டிவிட்டரில் பெரும் பரபரப்பாக இருந்தது.

பாபர் மசூதி இருந்தது, உள்ளது மற்றும் இருக்கும்…. பரபரப்பை ஏற்படுத்திய அசாதுதீன் ஓவைசியின் டிவிட்

கடந்த ஆண்டு நவம்பர் 9ம் தேதியன்று அயோத்தி வழக்கில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது. சர்ச்சைக்குரிய நிலத்தில் இந்துக்கள் கோயில் கட்டி கொள்ளலாம். அதேசமயம் வேறு பகுதியில் மசூதி கட்டி கொள்ள முஸ்லிம் சமுதாயத்தினர் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை அரசு வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தது.