நீங்க நீதிமன்றத்தில் ஏன் ஒப்புக்கொள்ளவில்லை?.. மத்திய அமைச்சரை விமர்சனம் செய்த அசாதுதீன் ஓவைசி..

நீங்க நீதிமன்றத்தில் ஏன் ஒப்புக்கொள்ளவில்லை?.. மத்திய அமைச்சரை விமர்சனம் செய்த அசாதுதீன் ஓவைசி..

மசூதி இடிக்கப்பட்டதை உச்ச நீதிமன்றத்தில் நீங்கள் ஏன் ஒப்புக்கொள்ளவில்லை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு அசாதுதீன் ஓவைசி கேள்வி எழுப்பினார்.
டெல்லியில் பா.ஜ.க. அலுவலகத்தில் ராமர் கோயில் கட்டுமானத்துக்கு கணிசமான தொகையை நன்கொடையாக வழங்கிய மக்களை வாழ்த்துவதற்காக ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேசுகையில் கூறியதாவது: பாபர் போன்ற வெளிநாட்டு படையெடுப்பாளர்கள் இந்தியாவுக்கு வந்தபோது, அவர் ஏன் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலை அழிக்க செய்தார்? நாட்டில் லட்சக்கணக்கான கோயில்கள் உள்ளன.

நீங்க நீதிமன்றத்தில் ஏன் ஒப்புக்கொள்ளவில்லை?.. மத்திய அமைச்சரை விமர்சனம் செய்த அசாதுதீன் ஓவைசி..
பிரகாஷ் ஜவடேகர்

ஏனென்றால் நாட்டின் உயிருள்ள சக்தி அங்கேயே தங்கியிருப்பதை அவர் புரிந்து கொண்டார். 1992 டிசம்பர் 6ம் தேதியன்று ஒரு வரலாற்று தவறு சரி (மசூதி இடிப்பு) செய்யப்பட்டது. அயோத்தியில் ஒரு பழங்கால ராமர் கோயில் அழிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட பின்னர் கட்டப்பட்ட சர்ச்சைக்குரிய கட்டுமானம் ஒரு மசூதி அல்ல,ஏனெனில் அங்கு யாரும் வழிபடவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். இதனை ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கடுமையாக விமர்சனம் செய்தார்.

நீங்க நீதிமன்றத்தில் ஏன் ஒப்புக்கொள்ளவில்லை?.. மத்திய அமைச்சரை விமர்சனம் செய்த அசாதுதீன் ஓவைசி..
உச்ச நீதிமன்றம்

அசாதுதீன் ஒவைசி இது தொடர்பாக கூறியதாவது: கோயில் இடிக்கப்பட்டதற்கான ஆதாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. மசூதி இடிக்கப்பட்டது சட்ட விதி மீறல் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது. சசித்திட்டம் இலலை என்று சி.பி.ஐ. நீதிமன்றம் கூறுகிறது. இதை ஏன் நீங்கள் பெருமையுடன் நீதிமன்றத்தில் ஒப்புக்கொள்ளவில்லை? வெட்கக்கேடானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.