பெங்களூரு கலவரம் மற்றும் பேஸ்புக் பதிவுக்கு அசாதுதீன் ஓவைசி கடும் கண்டனம்..

 

பெங்களூரு கலவரம் மற்றும் பேஸ்புக் பதிவுக்கு அசாதுதீன் ஓவைசி கடும் கண்டனம்..

நேற்று முன்தினம் இரவு பெங்களூரு நகரத்தையே போர் களமாக மாற்றிய வன்முறை சம்பவத்துக்கு ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில், பெங்களூருவில் நடந்த வன்முறைகள் மற்றும் ஆட்சேபிக்கத்தக்க\ஆபத்தான சமூக ஊடக பதிவுகள் ஆகியவை மிகவும் கண்டிக்கத்தக்கது. வன்முறையில் ஈடுபட வேண்டாம் என சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். அமைதி பலமடையும் என நான் நம்புகிறேன் என பதிவு செய்து இருந்தார்.

பெங்களூரு கலவரம் மற்றும் பேஸ்புக் பதிவுக்கு அசாதுதீன் ஓவைசி கடும் கண்டனம்..

பெங்களூரு புலிகேசி நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சீனிவாச மூர்த்தியின் உறவினர் நவீன் என்பவர் பேஸ்புக்கில் இஸ்லாம் மதம் தொடர்பாக அவதூறான புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. நவீனுக்கு எதிராக டிஜே ஹள்ளி காவல் நிலையத்தில் ஒரு தரப்பினர் புகார் அளித்துள்ளனர். ஆனால் போலீசார் புகாரை பதிவு செய்யவில்லை என தெரிகிறது. இதனால் அவர்கள் கோபத்தில் அந்த காவல் நிலையம் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர், அங்கியிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தனர்.

பெங்களூரு கலவரம் மற்றும் பேஸ்புக் பதிவுக்கு அசாதுதீன் ஓவைசி கடும் கண்டனம்..

அதேவேளையில், எம்.எல்.ஏ. சீனிவாச மூர்த்தி வீட்டின் மீது கல் வீசி தாக்குதல், அவரது வீட்டை சூறையாடினர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கலவரகாரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியாகி உள்ளனர். 30 பேர் காயம் அடைந்தனர். இந்த கலவரம் தொடர்பாக இதுவரை 110 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம்சாட்டப்பட்ட நவீனும் கைது செய்யப்பட்டுள்ளார்.