இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட முதல் நபர் இவர் தான்?

 

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட முதல் நபர் இவர் தான்?

டெல்லியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் ஒருவர் இந்தியாவிலேயே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

கொரோனாவுக்கு எதிரான உலகிலேயே மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கிவைத்தார். கோவிஷீல்ட், கோவாக்சின் என இரண்டு வகையான தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.

தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள யாரும் வற்புறுத்தப்பட மாட்டார்கள்; தாமாக முன்வருபவர்களுக்குப் போடப்படும் என மத்திய அரசு கூறியிருந்தது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட முதல் நபர் இவர் தான்?

முதற்கட்டமாக கொரோனா தடுப்பில் முன்கள வீரர்களாச் செயல்படும் சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் கூறப்பட்டது.

அந்த வகையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர் மனிஷ் குமார் (34) என்பவர், இந்தியாவிலேயே தடுப்பூசி போட்டுக்கொண்ட முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். சகப் பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள அச்சம் கொண்டதால், தாமே முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டதாகக் கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட முதல் நபர் இவர் தான்?
மனிஷ் குமார் (முதல் தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர்)

இதுதொடர்பாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “இந்தியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட முதல் நபர் நான் தான் என்று எனக்குத் தெரியாது. காலையில் பணிக்கு வந்தபோது என்னுடன் பணிபுரிபவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள அச்சமடைந்து தயங்கினார்கள்.

அவர்களின் அச்சத்தைப் போக்குவதற்காக நானே சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டேன். இதற்கு முன் எனக்கும் கொரொனா வந்துவிடுமோ என்ற அச்சத்தில் தயங்கி தயங்கி வேலை செய்தேன். தடுப்பூசி போட்டுக்கொண்டிருப்பதால் இனி தயங்காமல் என் வேலையைப் பார்ப்பேன்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட முதல் நபர் இவர் தான்?

தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் அரிப்பு, ஒவ்வாமை போன்ற எந்தப் பக்கவிளைவுகளும் எனக்கு ஏற்படவில்லை. நான் நலமாக உள்ளேன்” என்று பெருமையோடு கூறினார்.

எய்ம்ஸ் மருத்துவமனையில் எட்டு ஆண்டுகளாக மனிஷ் குமார் பணிபுரிந்துவருகிறார். இவர் இன்று காலை சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் முன்னிலையில் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.