மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அரசிதழ் வெளியீடு!

 

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அரசிதழ் வெளியீடு!

மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழக அரசின் சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனையடுத்து, எந்த இடத்தில் அமைப்பது? எய்ம்ஸ் அமைப்பதற்கான சூழல் இருக்கிறதா? உள்ளிட்டவற்றை மத்திய குழு ஆய்வு செய்தது. அதன் அடிப்படையில், மதுரையில் 1,264 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியது.

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அரசிதழ் வெளியீடு!

இந்நிலையில் தற்போது மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அரசிதழை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜெயலலிதா பெயரைச் சூட்டக் கோரிக்கை வைக்கப்படும் என ஆளும் அதிமுக அரசு தெரிவித்துள்ளது