கொரோனா 3.0 வுக்கு வாய்ப்புள்ளது – எய்ம்ஸ் இயக்குநர்

 

கொரோனா 3.0 வுக்கு வாய்ப்புள்ளது – எய்ம்ஸ் இயக்குநர்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3,57,229 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,02,82,833 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 3,449 பேர் உயிரிழந்த நிலையில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,22,408 ஆக உயர்ந்துள்ளது. 1,66,13,292 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்த நிலையில் 3,20,289 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

கொரோனா 3.0 வுக்கு வாய்ப்புள்ளது – எய்ம்ஸ் இயக்குநர்

இந்நிலையில் இந்தியா டுடே தொலைக்காட்சிக்கு செய்தியாளர்களிடம் பேசிய எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குளேரியா, “கொரோனா பரவலின் மூன்றாம் அலைக்கு வாய்ப்புள்ளது. பகுதிநேர மற்றும் இரவு நேர ஊரடங்கால் எந்த பலனும் இல்லை. குறைந்தது இரண்டு வார காலமாவது நாடு தழுவிய முழு ஊரடங்கு தேவை. அப்போதுதான் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும். மருத்துவ கட்டமைப்பு வசதிகளை அதிகரித்தல், நோயாளிகளின் எண்ணிக்கையை குறைத்த, தடுப்பூசி திட்டத்தை துரிதப்படுத்துதல் மூலமே கொரோனா சங்கிலியை உடைக்க முடியும்” எனக் கூறினார்.