நம் நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க காரணம் இதுதாங்க.. எய்ம்ஸ் இயக்குனர் சொல்லும் பகீர் தகவல்

நம் நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க காரணம் இதுதாங்க.. எய்ம்ஸ் இயக்குனர் சொல்லும் பகீர் தகவல்

நம் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதற்கு இரண்டு காரணங்களை குறிப்பிடுகிறார் எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா.

நம் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு அதிகரித்து வருகிறது. நாடு முழுவதுமாக தினசரி கொரோனா பாதிப்பு 2.50 லட்சத்தை நெருங்கி விட்டது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு பொதுமக்களும் ஒரு காரணம் என எய்ம்ஸ் இயக்குனர் கூறியுள்ளார். எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா கூறியதாவது: கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தடுப்பூசி செலுத்த தொடங்கியது மற்றும் கொரோனா பாதிப்பு குறைய ஆரம்பித்ததும் மக்கள் கோவிட்-19க்கு எதிரான பாதுகாப்பு நடத்தைகளை பின்பற்றுவதை நிறுத்தி விட்டனர்.

நம் நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க காரணம் இதுதாங்க.. எய்ம்ஸ் இயக்குனர் சொல்லும் பகீர் தகவல்
கொரோனா தடுப்பூசி

அந்த நேரத்தில்தான் கொடிய வைரஸ் உருமாறி மிக வேகமாக பரவியது. அதிகரித்து வரும் பாதிப்புகளுக்கு ஏற்ப நமது மருத்துவனை படுக்கைகளையும், வளங்களையும் தொடர்ந்து அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கையை நாம் உடனடியாக குறைக்க வேண்டும். வாழ்க்கையும் முக்கியம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நம் நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க காரணம் இதுதாங்க.. எய்ம்ஸ் இயக்குனர் சொல்லும் பகீர் தகவல்
மாஸ்க் அணியாத மக்கள்

எந்தவொரு தடுப்பூசியும் 100 சதவீதம் திறன் வாய்ந்ததாக இல்லை என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் தொற்றுநோயை பெறலாம். ஆனால் உங்கள் உடலில் உள்ள ஆன்டிபாடிஸ் வைரஸை பெருக்க அனுமதிக்காது. முந்தைய 6-7 மாதங்களுடன் ஒப்பிடும்போது டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு பெரிய அளவில் உள்ளது. சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் கட்டுபடுத்துதலை பொறுத்தவரை, கடந்த காலத்தில் நாம் என்ன செய்தோமோ அதை மீண்டும் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.