கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் லாக்டவுன் அவசியம்.. எய்ம்ஸ் இயக்குனர் வலியுறுத்தல்

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் லாக்டவுன் அவசியம்.. எய்ம்ஸ் இயக்குனர் வலியுறுத்தல்

கொரோனா பாதிப்பு நேர்மறை விகிதம் 10 சதவீதத்துக்கு மேல் இருக்கும் பகுதிகளில் கடுமையான லாக்டவுன் அமல்படுத்த வேண்டும் என எய்ம்ஸ் இயக்குனர் வலியுறுத்தியுள்ளார்.

நம் நாட்டில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரவமாக உள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல மாநிலங்கள் கடுமையான கட்டுப்பாடுகள், இரவு ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளன. ஆனாலும் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வராமல் உள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் லாக்டவுன் அவசியம்.. எய்ம்ஸ் இயக்குனர் வலியுறுத்தல்
கொரோனா வைரஸ்

பல மாநிலங்கள் லாக்டவுன் விதிக்கும் மனநிலையில் உள்ளன. இந்த சூழ்நிலையில் எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா, கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதியில் கடுமையான லாக்டவுன் அமல்படுத்த வேண்டும் பரிந்துரை செய்துள்ளார். இது தொடர்பாக செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் டாக்டர் ரன்தீப் குலேரியா கூறியதாவது:

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் லாக்டவுன் அவசியம்.. எய்ம்ஸ் இயக்குனர் வலியுறுத்தல்
மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள்

கொரோனா வைரஸின் பரிமாற்ற சங்கிலியை உடைக்க, கோவிட்-19 பாதிப்பு நேர்மறை விகிதம் 10 சதவீதத்துக்கு மேல் (100 பேரில் 10 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு) அல்லது மருத்துவமனைகளில் படுக்கை வசதி 60 சதவீதத்துக்கு மேல் ஆக்கிரமிப்பு (நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுதல்) செய்யப்பட்ட பகுதியில் கடுமையான பிராந்திய ஊரடங்குகளை விதிக்க வேண்டியது அவசியம் உள்ளது. கோவிட்-19 பணிக்குழுவும் இதே ஆலோசனை வழங்கி வருகிறது. இது மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களில் உள்ளது. ஆனால் அது கண்டிப்பாக செயல்படுத்தப்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.