“கொரானா கால கொடுமை” -எய்ம்ஸ் டாக்டர் எடுத்த விபரீத முடிவு -ஒரு மனநல மருத்துவரே தற்கொலை செய்து கொண்ட கொடுமை ..

புதுடெல்லியில் உள்ள (தேசிய மருத்துவ ஆராய்ச்சி கழகம்) எய்ம்ஸ் மருத்துவமனையில் டாக்டர் அனுராக் குமார் என்பவர் மனநல மருத்துவராக பணிபுரிகிறார் .அவரிடம் சிகிச்சைஎடுத்துக்கொண்ட ஏராளமான நோயாளிகள் குணமாகி இப்போது நல்ல நிலையில் இருக்கின்றனர் .

ஆனால் கடந்த சில மாதமாக அந்த மனநல மருத்துவர் குமாருக்கே, இந்த கொரானா காலத்தில் கடுமையான மன அழுத்த நோய் ஏற்பட்டுள்ளது .இதனால் கடுமையான மன உளைச்சலில் அவர் அந்த எய்ம்ஸ் மருத்துவமனையிலேயே சிகிச்சை எடுத்து கொண்டிருந்தார் .அதற்கான மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார் .இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் அந்த எய்ம்ஸ் ஹாஸ்பிடலின் பத்தாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார் .

அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எந்த தற்கொலை குறிப்பையும் எழுதி வைக்கவில்லை என்று அவரின் உடலை கைப்பற்றிய காவல் அதிகாரிகள் கூறினர் .அவரின் செல்போன் அவர் இருந்த அறையிலிருந்து கைப்பற்றப்பட்டது .அப்போது அவரின் சமூக ஊடக கணக்கை ஆராய்ந்த போலீசார் ,அவர் ஜூன் 21ம் தேதி தன்னுடைய வலைப்பதிவில் “ஒரு மன நல மருத்துவரின் தற்கொலை போராட்டம் “என்ற தலைப்பில் தான் தற்கொலை எண்ணத்துடன் போராடி வருவதாகவும் ,

தன்னுடைய தாயார் ஆதரவு தான் இன்னும் உயிரோடு இருக்க காரணமென்றும் ,தியானம் மற்றும் உடற்பயிற்சி மற்றும் மருந்துகள் மூலம் மன அழுத்தத்தை குறைக்க முடியும் என்றும் உயர் ரத்த அழுத்தத்துக்கும் ,மன அழுத்தத்துக்கும் தொடர்பு உண்டு இரண்டையும் கட்டுப்பாட்டுக்குள் வைக்கவேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார் .
இந்த தற்கொலை பற்றி எய்ம்ஸ் மருத்துவர்கள் சங்கத்தின் டாக்டர் ஆதர்ஷ் கூறுகையில், “டாக்டர் அனுராக் அனுராக் மிக சிறந்த மருத்துவர் ,அவர் இப்படி செய்வதை நான் எதிர்பார்க்கவில்லை என்று கூறினார் .

Most Popular

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை மக்கள் ஜனநாயக கட்சி கை விடாது….. இல்டிஜா முப்தி உறுதி..

ஜம்மு அண்டு காஷ்மீரில் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தியின் மகள் இல்டிஜா முப்தி அண்மையில் செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர்...

ராமர் கோயிலுக்காக 24 கிலோ வெள்ளி செங்கல்களை வழங்கிய ஜெயின் மக்கள்..

ராமர் கோயில் கட்டுமான பணிகள் வரும் 5ம் தேதியன்று பூமி பூஜையுடன் தொடங்க உள்ளது. ராமர் கோயில் கட்டுமான பணிக்காக பல்வேறு தரப்பு மக்களும் மத வேறுபாடின்றி நன்கொடை வழங்கி வருகின்றனர். நேற்று...

என்னதான் ஆச்சு… தொடர் நஷ்டத்தில் டாடா மோட்டார்ஸ்..

நாட்டின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ் கடந்த ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் ரூ.8,443.98 கோடியை...

ராமர் கோயில் பூமி பூஜை! இன்னும் எத்தனை பேரை மருத்துவமனைக்கு அனுப்ப விரும்புகிறீர்கள் மோடிஜி- திக்விஜய சிங்

அயோத்தியில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக உள்ள ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நாளை நடைபெற உள்ளது. அந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்ட உள்ளார். இந்த...