சசிகலா – பாஜக இருவரையும் அட்டாக் செய்து பேசிய அதிமுகவின் முக்கிய பிரமுகர்!

 

சசிகலா – பாஜக இருவரையும் அட்டாக் செய்து பேசிய அதிமுகவின் முக்கிய பிரமுகர்!

அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் நடைபெற்று வருகிறது. அதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் முக்கிய தீர்மானங்கள் இயற்றப்பட்டன.

அவற்றின் மூலம் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்பது மீண்டும் உறுதிசெய்யப்பட்டது. மேலும், தமிழக அரசு கொண்டு வந்த பல்வேறு திட்டங்களுக்கு நன்றி சொல்லும் விதமாக பல தீர்மானங்கள் இருந்தன.

சசிகலா – பாஜக இருவரையும் அட்டாக் செய்து பேசிய அதிமுகவின் முக்கிய பிரமுகர்!

அதன்பின் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேசினார். அவர் பேச்சு பல்வேறு யூகங்களை உடைத்தெறிவதுபோல இருந்தது. சசிகலாவின் விடுதலைக்குப் பிறகு என்னாவகும்… கூட்டணியில் இருந்துகொண்டே மாற்றுக்கருத்துகளைச் சொல்லும் பாஜக தலைவர்கள்…. இந்த இரண்டு விஷயங்கள் பற்றி இந்தப் பொதுக்குழுவில் என்ன முடிவெடுக்க போகிறீர்கள் அல்லது பேசாமல் தவிர்க்க போகிறார்களா என்பதைத்தான் பலரும் எதிர்பார்த்தது. அதற்கான பதிலாக கே.பி.முனுசாமி பேச்சு அமைந்தது.

சசிகலா – பாஜக இருவரையும் அட்டாக் செய்து பேசிய அதிமுகவின் முக்கிய பிரமுகர்!

கே.பி.முனுசாமி பேசுகையில், “சசிலகா சிறையிலிருந்து வெளியே வந்தால் கட்சி உடைந்துவிடும் என்று சிலர் சொல்கிறார்கள். அது நிச்சயம் நடக்காது. சிலர் வெளியே வந்தாலும் ஏதும் ஆகாது. மேலும், சசிகலா வெளியே வந்ததும் அவர் எதிர்கொள்ள ஆயிரம் பிரச்சனைகள் இருக்கின்றன” என்றவர் அப்படியே பாஜக விஷயத்துக்குத் தாவினார்.

“தேசிய கட்சிகள் அதிமுகவுக்கு ஒரு பொருட்டே இல்லை. அவை நம் கட்சியின் தோள் மீதோ, திமுகவின் தோள் மீதோதான் ஏறி பயணிக்க வேண்டும். அதனால், நமக்கும் வாரிசு அரசியல் செய்யும் கட்சிக்கும்தான் போட்டி” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறார். நேரடியாக பாஜகவின் பெயரைச் சொல்லா விட்டாலும், அதிமுக கூட்டணியில் இருக்கும் தேசிய கட்சி பாஜக தான் என்பது எல்லோருக்குமே தெரியும். அதனால், அவர் குறிப்பிடுவது பாஜகவைத்தான் என்பதே பலரின் கருத்து.

சசிகலா – பாஜக இருவரையும் அட்டாக் செய்து பேசிய அதிமுகவின் முக்கிய பிரமுகர்!

அதிமுக தேர்தல் பரப்புரை தொடக்க விழாவில் கே.பி.முனுசாமி பேசுகையில், “தமிழகத்தில் கூட்டணி ஆட்சி இல்லை. இது திராவிட மண். ஜெயலலிதா, கருனாநிதி என்கிற ஆளுமைகள் இல்லாத நேரத்தில் சிலர் உள்ளே புகுந்து ஆதாயம் தேட நினைக்கிறார்கள். எந்த தேசிய கட்சியும் உள்ளே நுழைந்து விடாமல் காத்து வருவது திராவிட இயக்கம்” என்று காரசாரமாகப் பேசியிருந்தார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பாஜகவினர் இதை ரசிக்க வில்லை என்பதை பல ஊடக நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர்களின் பேச்சிலிருந்து புரிந்துகொள்ள முடிந்தது. இந்நிலையில் இன்றைய பேச்சு என்னவாகப் போகிறதோ?