திமுக மக்கள் சபையில் சலசலப்பு ஏற்படுத்திய பெண், அதிமுக பிரமுகரா?

 

திமுக மக்கள் சபையில் சலசலப்பு ஏற்படுத்திய பெண், அதிமுக பிரமுகரா?

திமுகவினர் வரும் சட்டமன்ற தேர்தலுக்கான பிரசார உத்தியாக, கிராம சபை கூட்டங்களை நடத்த முடிவெடுத்தது. ஓரிரு கூட்டங்கள் நடத்தியதும் கிராம சபை எனும் பெயரைப் பயன்படுத்த அரசு தடை போட்டதால் திமுக மக்கள் சபை என்று பெயரை மாற்றிக்கொண்டது.

பல ஊர்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடியாகச் சென்று இந்தக் கூட்டங்களில் கலந்துகொள்கிறார். மக்களிடம் நேரில் உரையாடி வருகிறார். இது பொதுமக்கள் மத்தியில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது.

திமுக மக்கள் சபையில் சலசலப்பு ஏற்படுத்திய பெண், அதிமுக பிரமுகரா?

அதன்படி, இன்று கோயம்புத்தூர், தொண்டாமுத்துரில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அப்போது அந்த விழாவில் பேசிய ஸ்டாலின், ”எல்.இ.டி. விளக்குகளை கொள்முதல் செய்ததில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் ; வேலுமணி உள்ளாட்சி அமைச்சரா? ஊழலாட்சி அமைச்சரா? தங்கமணி, வேலுமணி எல்லா மணியும்; எல்லாமே money moneyன்னு இருக்கு..இப்படி பல அமைச்சர்கள் குறித்து ஊழல் புகாரை ஆளுநரிடம் வழங்கியுள்ளோம்” என்று அதிமுக அரசை தொடர்ந்து குற்றம் சாட்டியுள்ளார்.

மக்கள் பேசுவதற்கு ஏற்கெனவே பெயர் வாங்கப்பட்டு அதன் வரிசையில் அழைக்கப்பட்டனர். அப்போது அனுமதி ஏதும் பெறாத பெண் ஒருவர் திடீரென்று மைக்கைப் பிடுங்கிப் பேச முயற்சி செய்தார். அதற்கு ஸ்டாலின், ”என் கிட்ட கொடுத்த பட்டியல்ல உங்க பெயர் இல்லை? நீங்கள் எந்த ஊர் என்று கேட்க? ஊரே தெரியாமல் கிராம சபை கூட்டம் நடத்துவது எதிர்கேள்வி கேட்க?” என்று கேட்டார். அதற்கு பதில் சொல்லாமல், வேறு ஏதோ பேச ஆரம்பித்தார் அந்தப் பெண்.

திமுக மக்கள் சபையில் சலசலப்பு ஏற்படுத்திய பெண், அதிமுக பிரமுகரா?

அந்தப் பெண்ணின் செயலால் அதிர்ச்சி அடைந்த திமுகவினர், அவரை கூட்டத்திலிருந்து அப்புறப்படுத்தினார்கள். கூட்டத்தில் வெளியேற்றப்பட்ட பெண் டிவிக்கு பேட்டிக்கொடுக்கையில் ஒருவர் மொபைலை நீட்டி, அமைச்சர் பேசறார் என்று சொல்கிறார். போனை வாங்கிய அந்தப் பெண், நன்கு அறிமுகமான நபருடன் பேசுவதைப் போல அமைச்சருடன் பேசத் தொடங்குகிறார்.

“ஸ்டாலின் கூட்டம் போடறாங்கன்னு வந்தேன். உங்களைப் பற்றி குற்றம் சொல்லி பேசினாங்க. எழுந்திருச்சு கேள்வி கேட்டேன். வெளியே அனுப்பிட்டாங்க. இப்போ போலீஸ் ஸ்டேஷனில் வெச்சிருக்காங்க” என்கிறார். அதற்கு மறுமுனையில் என்னவோ சொல்லப்படுகிறது.

திமுக மக்கள் சபையில் சலசலப்பு ஏற்படுத்திய பெண், அதிமுக பிரமுகரா?

அந்தப் பெண்ணின் அருகில் இருந்த ஒருவர், ‘நாங்க இல்லாட்டி பூங்கொடியை’ என்று ஏதோ சொல்ல ஆர்மபித்து நிறுத்துகிறார். இதன்மூலம் அந்தப் பெண்ணின் பெயர் பூங்கொடி என்று யூகிக்க முடிகிறது. மேலும், அவருக்காக அதிமுகவினர் ஆதரவாக நிற்பதாகச் செய்திகள் வருகின்றன. அதனால், அந்தப் பெண் அதிமுகவைச் சேர்ந்தவராகவோ, அதிமுக அனுதாபியாகவோ இருக்க வாய்ப்பிருக்கிறது.

அதன்பின் பேசிய ஸ்டாலின், ‘இப்படி ஆகும் என எதிர்பார்த்தேன். எப்படியாவது இந்தக் கூட்டத்தை சீர்குலைக்க ஏதேனும் செய்வார்கள் என நினைத்தேன்’ என்றார்.