சிவகங்கை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றி!

 

சிவகங்கை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றி!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 16 ஊராட்சி வார்டுகள் இருக்கின்றன. இந்த ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தல் கடந்த ஜனவரி மாதம் நடக்கவிருந்த நிலையில், மார்ச் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. தேர்தலை அதிமுக கவுன்சிலர்கள் புறக்கணித்ததாலும், பெரும்பான்மை இல்லாததாலும் தொடர்ந்து 3 முறை இந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றி!

இதை தொடர்ந்து, இன்று சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தல் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. இதில் திமுக சார்பில் செந்தில் என்பவரும் அதிமுக சார்பில் பொன்மணி பாஸ்கர் போட்டியிட்டனர். தேர்தலின் முடிவில் மீண்டும் தலா 8 வாக்குகள் பெற்று திமுகவும் அதிமுகவும் சமமாக வெற்றி பெற்றதால் குலுக்கல் முறையில், தலைவரை தேர்தெடுக்க ஆட்சியர் முடிவெடுத்தார்.

அதன் படி, குலுக்கல் முறை நடந்த சிவகங்கை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் பொன்மணி பாஸ்கர் வெற்றி பெற்றதாக ஆட்சியர் அறிவித்துள்ளார். இன்று மதியம் 3 மணிக்கு நடக்கவிருக்கும் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக தெரிகிறது.