அதிமுக வெளிநடப்பு ; தைரியமில்லாமல் ஓடியதாக திமுக குற்றச்சாட்டு!!

 

அதிமுக வெளிநடப்பு ; தைரியமில்லாமல் ஓடியதாக திமுக குற்றச்சாட்டு!!

பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். கடந்த ஆட்சிக்காலத்தில் செயல்படுத்திய திட்டங்கள் அதிமுக அரசு முடக்கி வைத்து இருப்பதாக அதிமுக புகார் கூறியதுடன் நேரம் இல்லாத நேரத்தில் பேச அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி அதிமுக வெளிநடப்பு செய்தனர்.

அதிமுக வெளிநடப்பு ; தைரியமில்லாமல் ஓடியதாக திமுக குற்றச்சாட்டு!!

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் குறித்து பேரவையில் கே.பி.முனுசாமி பேச முயற்சித்தார்; தொடர்ந்து வலியுறுத்தியும் அனுமதி அளிக்கவில்லை, இதை கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம் என்றார்.

அதிமுக வெளிநடப்பு ; தைரியமில்லாமல் ஓடியதாக திமுக குற்றச்சாட்டு!!

இதை தொடர்ந்து குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்துசெய்யக் கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிஏஏ குறித்த தீர்மானத்தை ஆதரிக்க தைரியம் இல்லாததால் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர் என்றார். அதேபோல் அமைச்சர் துரைமுருகன், சிஏஏவிற்கு எதிரான தீர்மானத்தை எதிர்க்க தைரியமில்லாததால் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். தீர்மானத்தை ஆதரிக்கவும் அவர்களுக்கு தைரியமில்லை என்பதுதான் உண்மை என்றார்.

அத்துடன் அதிமுக உறுப்பினர்கள் திட்டமிட்டு வெளிநடப்பு செய்கிறீர்கள் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார் . வெளிநடப்புக்கு வேறு நல்ல காரணங்கள் சொல்லலாம்; போய் வாருங்கள் என்று விமர்சித்தார்.