“வழக்குகளை எதிர்கொள்ள சட்டக்குழு அமைத்தது அதிமுக” : ஈபிஎஸ் – ஓபிஎஸ் அதிரடி!

 

“வழக்குகளை  எதிர்கொள்ள சட்டக்குழு அமைத்தது அதிமுக” : ஈபிஎஸ் – ஓபிஎஸ் அதிரடி!

திமுக ஆட்சி பொறுப்பை ஏற்பதற்கு முன்பே அப்போதைய அதிமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை ஆளுநரிடம் அளித்து புகார் அளித்தது. தற்போது திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றுக்கொண்ட நிலையில் அதிமுக அமைச்சர்களின் வீட்டில் அடுத்தடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் வீடுகளில் சோதனை நடைபெற்றது. ஆனால் இவை திமுகவின் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நடத்தப்படுபவை என அதிமுக தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் திமுகவினரால் தொடுக்கப்படும் பொய் வழக்குகளை சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் வகையில் அதிமுக சட்ட ஆலோசனை குழுவை அமைத்து உள்ளதாக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுகவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும் பலர் மீது ஆளும் கட்சியினரின் தூண்டுதலால் , பழிவாங்கும் எண்ணத்தோடு பொய் வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

“வழக்குகளை  எதிர்கொள்ள சட்டக்குழு அமைத்தது அதிமுக” : ஈபிஎஸ் – ஓபிஎஸ் அதிரடி!

கழக பணிகளிலும், மக்கள் பணிகளிலும் அல்லும் பகலும் அயராது ஈடுபட்டுவரும் கழகத்தை சேர்ந்த அனைவருக்கும், அதிமுக என்றென்றும் பாதுகாப்பு அரணாகத் திகழும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுகவினரின் தூண்டுதலால் கழகத்தினர் மீது தொடுக்கப்படும் பொய் வழக்குகளை சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் வகையில் கழகத்தின் சார்பில் கழக சட்ட ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது.

“வழக்குகளை  எதிர்கொள்ள சட்டக்குழு அமைத்தது அதிமுக” : ஈபிஎஸ் – ஓபிஎஸ் அதிரடி!

இக்குழுவில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், தளவாய்சுந்தரம், சி.வி.சண்முகம், மனோஜ் பாண்டியன் , இன்பதுரை பாபு முருகவேல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.அரசியல் எதிரிகளால் காழ்ப்புணர்ச்சியோடு பொய் வழக்குகளை பதிவு செய்யும்போது, அத்தகையவர்களுக்கு கழக சட்ட ஆலோசனைக்குழு அந்த வழக்குகளுக்கான அனைத்து சட்ட உதவிகளையும் முழுமையாக செய்யும் . எனவே கழக உடன்பிறப்புகள் மேற்கண்ட குழுவினரை தொடர்பு கொண்டு உரிய தீர்வு காணுமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.