’அதிமுக – சசிகலா கூட்டணி ஓகே’ கட்சியுடன் இணைப்பு சாத்தியமில்லை – புதிய சர்ச்சை

 

’அதிமுக – சசிகலா கூட்டணி ஓகே’ கட்சியுடன் இணைப்பு சாத்தியமில்லை – புதிய சர்ச்சை

2021 மே மாதத்தில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக திமுக – அதிமுக கூட்டணிகள் தொகுதி பங்கீடு உள்ளிட்ட பேச்சுவார்த்தைகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டு வருகின்றன.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன. அதிமுகவில் பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, புதிய தமிழகம் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.

’அதிமுக – சசிகலா கூட்டணி ஓகே’ கட்சியுடன் இணைப்பு சாத்தியமில்லை – புதிய சர்ச்சை

இம்மாதம் (ஜனவரி) 27ஆம் தேதி ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா சிறையில் இருந்து வெளியே வருகிறார். அவரின் வருகை தமிழக அரசியலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் என பலரும் கணிக்கிறார்கள். குறிப்பாக அதிமுகவில் சசிகலா மற்றும் தினகரன் கட்சியினர் வைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துக்ளக் விழாவில் பத்திரிகையாளர் குருமூர்த்தி பேசியதும் இதை ஒட்டித்தான். சசிகலாவை வைத்துக்கொண்டது திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதுதான் குருமூர்த்தி பேச்சின் சாரம். எனவே அதிமுகவில் சசிகலா இணைக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியான தகவல் தான்.

ஆனால் இதை அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளரான எடப்பாடி பழனிசாமி தரப்பு விரும்பவில்லை என்று தெரிகிறது. முதல்வரின் டெல்லி பயணத்தின்போது கூட சசிகலா மற்றும் தினகரன் அதிமுகவில் இணைக்கப்படுவது குறித்த அதிருப்தியை அழுத்தமாக அமித் ஷா மற்றும் மோடியிடம் வெளிப்படுத்தும் திட்டத்தில் இருப்பதாகவும் செய்திகள் அடிபடுகின்றன.

’அதிமுக – சசிகலா கூட்டணி ஓகே’ கட்சியுடன் இணைப்பு சாத்தியமில்லை – புதிய சர்ச்சை

இதற்கு மாற்றாக தினகரன் கட்சியின் தலைவராக சசிகலா பொறுப்பேற்றுக் கொண்டதும் அதிமுக தினகரன் கட்சி இரண்டும் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் அதாவது சசிகலாவை கட்சியில் இணைக்க வேண்டாம். தினகரன் கட்சியைக் கூட்டணிக்குள் வைத்துக்கொள்ளலாம். இதன்மூலம் சசிகலா – தினகரன் ஆதரவும் அதிமுக தரப்புக்கே இருக்கும். அந்த ஓட்டுகள் திமுகவுக்கு எதிராக விழுந்து அதிமுகவை பலப்படுத்தும் என்று அதிமுக தலைமை நினைக்கிறதாம்.

சசிகலா கட்சியில் இணைக்கப்படுவது என்ன சிக்கல் என்று பாஜக தரப்பில் கேட்கப்படுகிறது. இதில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வத்திற்கு பெரிய கருத்து ஏதும் இல்லாமல்தான் இருக்கிறாராம். சசிகலா இணைக்கப்பட்டால் ஓகே… கூட்டணியாக இருந்தாலும் ஓகே என்பதுதான் அவருடைய நிலைப்பாடாக இருக்கிறதாம்.

’அதிமுக – சசிகலா கூட்டணி ஓகே’ கட்சியுடன் இணைப்பு சாத்தியமில்லை – புதிய சர்ச்சை

ஆனால் எடப்பாடி பழனிசாமி நிலைப்பாடு என்பது சசிகலா மீண்டும் கட்சிக்குள் வந்தால் கட்சி அவரின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விடும். அதனால் முதல்வர் வேட்பாளர் தொடங்கி அனைத்துமே சசிகலாவின் முடிவாக மாறிவிடும் என்று தயக்கம் காட்டுகிறாராம். அதனால்தான் சசிகலா தினகரன் கட்சியுடன் கூட்டணிக்கு சம்மதம். ஆனால், அவர்களைக் கட்சிக்குள் இணைப்பதற்கு சம்மதம் இல்லை என்று தெரிவித்து வருவதாக செய்திகள் சொல்கின்றன.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் டெல்லி பயணம் முடிந்து இறுதியாக வரும் தகவல்களை இவற்றை உறுதிப்படுத்தும்.