தேர்தல் அறிக்கையை வெளியிடும் அதிமுக.. உச்சக்கட்ட பரபரப்பில் அரசியல் களம்!

 

தேர்தல் அறிக்கையை வெளியிடும் அதிமுக.. உச்சக்கட்ட பரபரப்பில் அரசியல் களம்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஒரு சில வாரங்களில் நடைபெறவிருக்கிறது. தேர்தலை எதிர்நோக்கி அரசியல் களமே அதிரி புதிரியாகியுள்ளது. கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து திமுக, அதிமுக ஆகிய மாபெரும் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருக்கும் நிலையில், தேர்தல் பிரச்சாரங்கள் அனல் பறக்கின்றன.

தேர்தல் அறிக்கையை வெளியிடும் அதிமுக.. உச்சக்கட்ட பரபரப்பில் அரசியல் களம்!

இதனிடையே அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. அமமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டதைத் தொடர்ந்து, திமுக தனது அறிக்கையை வெளியிட்டது. பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, கல்விக் கடன் தள்ளுபடி, நீட் தேர்வு ரத்து, ரேஷன் அட்டைகளுக்கு ரூ.4,000 பணம் என அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்த திமுகவின் தேர்தல் அறிக்கை, அனைவரையும் திரும்பி பார்க்கவைக்கும் அளவுக்கு இருந்தது.

தேர்தல் அறிக்கையை வெளியிடும் அதிமுக.. உச்சக்கட்ட பரபரப்பில் அரசியல் களம்!

இந்த நிலையில், ஆளும் கட்சியான அதிமுக இன்று மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதல்வர் ஈபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் இணைந்து அறிக்கையை வெளியிட உள்ளனர். ரேஷன் அட்டைகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500 கொடுக்கப்படும், வருடத்துக்கு 6 சிலிண்டர்கள் வழங்கப்படும் என அதிமுக ஏற்கனவே வாக்குறுதி கொடுத்திருக்கிறது. அவையும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருக்கும்.

12 பேர் அடங்கிய குழு, தமிழ்நாடு முழுக்க பயணித்து மக்களின் தேவைகளையும் குறைகளையும் அறிந்து அதிமுகவின் தேர்தல் அறிக்கையை தயாரித்திருக்கிறதாம். திமுகவின் தேர்தல் அறிக்கையை மிஞ்சும் அளவுக்கு அதிமுகவின் தேர்தல் அறிக்கை இருக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..