திமுக அரசை கண்டித்து அதிமுக இன்று ஆர்ப்பாட்டம்!

 

திமுக அரசை கண்டித்து அதிமுக இன்று ஆர்ப்பாட்டம்!

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியை கண்டித்து இன்று அதிமுக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.

திமுக அரசை கண்டித்து அதிமுக இன்று ஆர்ப்பாட்டம்!

கடந்த மே 7ஆம் தேதி தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்று கொண்டார். ஸ்டாலின் பதவியேற்று 3 மாதங்கள் ஆன நிலையில் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் விலை குறைப்பு என திமுக அரசு தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டதாக அதிமுக குற்றம்சாட்டி வருகிறது. தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும் தமிழ் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்படுத்தவும் திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

திமுக அரசை கண்டித்து அதிமுக இன்று ஆர்ப்பாட்டம்!

திமுக அரசின் மெத்தனப் போக்கை களையவும் அக்கறையுடன் மக்களுக்கு மக்கள் குரலுக்கு செவிசாய்க்க செய்யவும் இன்று காலை 10 மணிக்கு அதிமுக தொண்டர்கள் மாநகராட்சி, நகராட்சி ,பேரூராட்சி, ஒன்றியம், ஊராட்சி ஆகிய பகுதிகளில் தங்கள் வீடுகளின் முன்னே பதாகைகளை ஏந்தி கவனயீர்ப்பு முழக்கங்களை எழுப்பி தமிழ்நாட்டு மக்களின் உரிமைக் குரல்கள் ஒலிக்க வேண்டும் என இபிஎஸ் -ஓபிஎஸ் இருவரும் கேட்டுக் கொண்டனர்.அதன்படி கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி அதிமுகவினர் வீட்டு வாசலிலேயே ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளனர். ஓபிஎஸ் -இபிஎஸ் இருவரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.