“தமிழகத்திற்கு பேரிழப்பு; சொல்லொண்ணா சோகம் அடைந்தேன் மது அண்ணா” – எடப்பாடி உருக்கம்!

 

“தமிழகத்திற்கு பேரிழப்பு; சொல்லொண்ணா சோகம் அடைந்தேன் மது அண்ணா” – எடப்பாடி உருக்கம்!

வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் கோளாறால் பல மாதங்களாக அவதிப்பட்டு வந்த அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் இன்று காலமானார். அவருக்கு வயது 80. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இவரது மனைவி ஏப்ரல் 19ஆம் தேதி மறைந்தார். அப்போதும் இவர் மருத்துவமனையில்தான் இருந்தார். இதிலிருந்தே மன ரீதியாகவும் அவர் உடைந்துவிட்டார்.

“தமிழகத்திற்கு பேரிழப்பு; சொல்லொண்ணா சோகம் அடைந்தேன் மது அண்ணா” – எடப்பாடி உருக்கம்!

இச்சூழலில் இன்று சிகிச்சை பலனளிக்காததால் மருத்துவமனையிலேயே மதுசூதனனின் உயிர் பிரிந்தது. அதிமுகவின் முதுபெரும் தலைவரான மதுசூதனின் மறைவுக்கு அதிமுக தலைவர்கள் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கழக இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “புரட்சித்தலைவர் காலம் தொட்டு கழகத்தின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்ட கழக மூத்த முன்னோடி, புரட்சி தலைவி அம்மா அவர்களின் அன்பை பெற்றவர்.

கழக அவைத்தலைவர் அருமை அண்ணன் மதுசூதனன் அவர்களின் மறைவு செய்தியறிந்து ஆற்றொண்ணா பெருந்துயரும் சொல்லொண்ணா சோகமும் அடைந்தேன். அண்ணன் மதுசூதனன் அவர்களின் மறைவு கழகத்திற்கு மட்டுமல்லாது தமிழகத்திற்கே ஒரு பேரிழப்பு. அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.