‘தேர்தலுக்கு தயாராகும் அதிமுக’ – பணிகள் குறித்து முக்கிய ஆலோசனை!

 

‘தேர்தலுக்கு தயாராகும்  அதிமுக’ – பணிகள் குறித்து முக்கிய ஆலோசனை!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதான கட்சிகளான திமுகவும் அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. திமுக தேர்தல் அறிக்கையை தயார் செய்துவிட்டு, ஜனவரி மாதத்தில் இருந்து பரப்புரை தொடங்கும் என அறிவித்திருக்கிறது. ஆனால் அதிமுகவோ கூட்டணிக் குழப்பம், உட்கட்சி பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் தேர்தல் பணிகளை தாமதமாகவே தொடங்கியது.

‘தேர்தலுக்கு தயாராகும்  அதிமுக’ – பணிகள் குறித்து முக்கிய ஆலோசனை!

அரசியலில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய மாபெரும் தலைவர்கள் இல்லாமல் நடக்கவிருக்கும் முதல் தேர்தல் என்பதால், இந்த சட்டமன்ற தேர்தல் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கடந்த 2 முறையாக ஆட்சியை கைவிட்ட திமுக இந்த ஆண்டு அரியணை ஏறியே ஆக வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கும் நிலையில், ஆட்சியை எப்படியாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என அதிமுக மும்முரம் காட்டி வருகிறது.

‘தேர்தலுக்கு தயாராகும்  அதிமுக’ – பணிகள் குறித்து முக்கிய ஆலோசனை!

இந்த நிலையில் மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ்ஸும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மக்களவைத் தேர்தலில் இருந்த அதிமுக- பாஜக- தேமுதிக கூட்டணி குறித்தும் அதிமுக வெற்றி பெற வாய்ப்பு அதிகம் உள்ள தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது குறித்தும் அரசு நலத்திட்ட உதவிகள் குறித்து மக்களிடம் கொண்டு சேர்ப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

கடந்த முறை நடந்த தேர்தலில் கூட்டணியின்றி அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு அதிமுக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.