அதிமுக – பாமக தொகுதி பங்கீடு இன்று இறுதியாகிறது!

 

அதிமுக – பாமக தொகுதி பங்கீடு இன்று இறுதியாகிறது!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. ஏப்ரல் இறுதியில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தேர்தலுக்கு ஒரு மாத காலமே அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. இதனால், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தியிருக்கின்றன. ஐபேக் நிறுவனத்துடன் கைகோர்த்திருக்கும் திமுக அசுர வேகத்தில் தேர்தல் பணிகளை செய்து கொண்டே, கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

அதிமுக – பாமக தொகுதி பங்கீடு இன்று இறுதியாகிறது!

அதே போல, அதிமுகவும் தன்னுடன் கூட்டணி அமைக்கும் தேசிய கட்சியான பாஜகவுக்கு 22 தொகுதிகளும் பாமகவுக்கு 23 தொகுதிகளும் வழங்க திட்டமிட்டிருக்கிறது. அரசியல் ரீதியாக மிக முக்கியமானதாக பார்க்கப்படும் இந்த தேர்தலில் எப்படியாவது ஆட்சியை பிடிக்க ஸ்கெட்ச் போட்டிருக்கும் எடப்பாடி, பாமக கூட்டணி நழுவாமல் இருக்க வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இது பாமகவினரின் வயிற்றில் பால் வார்ப்பது போல அமைந்தது.

அதிமுக – பாமக தொகுதி பங்கீடு இன்று இறுதியாகிறது!

பாமகவின் 40 ஆண்டுகால கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டு இருப்பதால் இன்றே தொகுதி பங்கீட்டை முடிவு செய்ய இரு கட்சிகளும் திட்டமிட்டுள்ளதாம். பாமகவினர் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் இருவரையும் சந்தித்து பேச உள்ளார்களாம். அதனால் அதிமுக – பாமக தொகுதி பங்கீடு இன்றே இறுதியாகும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.