அதிமுக – பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை – பாஜக அண்ணாமலை

 

அதிமுக – பாஜக  கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை – பாஜக அண்ணாமலை

அதிமுக – பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்று தமிழக பாஜக துணை தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

2021 சட்டப்பேரவை தேர்தலுக்காக தமிழக கட்சிகள் தயாராகி வருகின்றன. தற்போது அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் குழப்பத்திற்கு முடிவு எட்டப்பட்டு விட்டது.இருப்பினும் அதிமுகவுடன் கூட்டணிக் குறித்து பாஜகவில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை கூறி வருகிறார்கள்.

அதிமுக – பாஜக  கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை – பாஜக அண்ணாமலை

அதிமுகவுடன் கூட்டணி வைத்தது நாடாளுமன்ற தேர்தலுக்காக தான். கூட்டணி குறித்து தேர்தலில் நேரத்தில் தான் முடிவெடுக்க முடியும். திமுகவுடன் கூட்டணி அமையலாம் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இது அதிமுக -பாஜக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக – பாஜக  கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை – பாஜக அண்ணாமலை

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக துணை தலைவர் அண்ணாமலை,” சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யும் நேரம் இதுவல்ல. அதிமுக – பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. நாங்கள் ஒரே நேர்கோட்டில் பயணித்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.