சித்த மருத்துவத்திற்கு தேசிய அங்கீகாரம் தேவை : அதிமுக எம்பி தம்பிதுரை கோரிக்கை!

சித்த மருத்துவத்திற்கு தேசிய அங்கீகாரம் தேவை : அதிமுக எம்பி தம்பிதுரை கோரிக்கை!

தமிழ்நாட்டில் உள்ள தேசிய சித்த ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அங்கீகாரம் தர மாநிலங்களவையில் எம்பி தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார்.

யுனானி மருத்துவத்துடன் ஒப்பிடுகையில் சித்த மருத்துவத்திற்கு சலுகைகளும் , மதிப்பும் கிடைப்பதில்லை என்பதே கசப்பான உண்மை. கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக கூறி வீடியோ வெளியிட்ட சித்த மருத்துவர் தணிகாசலம் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.

சித்த மருத்துவத்திற்கு தேசிய அங்கீகாரம் தேவை : அதிமுக எம்பி தம்பிதுரை கோரிக்கை!

அவர் கூறியதில் உண்மை இருக்கிறதா என்று கூட மத்திய அரசு ஆய்வு செய்ய தயாராக இல்லை. மேலும் இந்த இந்திய மருத்துவ துறைகளான ஆயுர்வேதம், சித்தா, யுனானி உள்ளிட்ட மருத்துவ துறைகளுக்கு கடந்த 10 ஆண்டுகளில் நிதி ஒதுக்கப்பட்டதில் சித்த மருத்துவ துறைக்கு 437 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது நீதிமன்றத்தின் கண்டனத்தை பெற்றது. காரணம் யுனானி மருத்துவத்திற்கு மத்திய அரசால் 3ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது தான்.

சித்த மருத்துவத்திற்கு தேசிய அங்கீகாரம் தேவை : அதிமுக எம்பி தம்பிதுரை கோரிக்கை!

இந்நிலையில் சித்தமருத்துவமும் முக்கியமான மருத்துவ முறை என்பதால் அதற்கு தேசிய அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக எம்.பி., தம்பிதுரை கோரிக்கை வைத்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள தேசிய சித்த ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அங்கீகாரம் தர மாநிலங்களவை அவர் வலியுறுத்தியுள்ளார்.