அதிமுக எம்பி எஸ்.ஆர்.பாலசுப்ரமணியனுக்கும் விவசாயம் பற்றி தெரியாதா? முதல்வருக்கு ஸ்டாலின் பதிலடி!

அதிமுக எம்பி எஸ்.ஆர்.பாலசுப்ரமணியனுக்கும் விவசாயம் பற்றி தெரியாதா?  முதல்வருக்கு ஸ்டாலின் பதிலடி!

மத்திய அரசின் சட்டங்களைப் பற்றி ஆராய்ந்து கருத்து சொல்ல விவசாயியாக இருக்க அவசியம் இல்லை என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிமுக எம்பி எஸ்.ஆர்.பாலசுப்ரமணியனுக்கும் விவசாயம் பற்றி தெரியாதா?  முதல்வருக்கு ஸ்டாலின் பதிலடி!

விவசாயம் பற்றி தெரியாததால் தான் ஸ்டாலின் விவசாய சட்டங்களை எதிர்ப்பதாக முதல்வர் பழனிசாமி கூறியிருந்தார். இந்நிலையில் இதுகுறித்து பதிலளித்துள்ள ஸ்டாலின், “வேளாண் சட்டங்களை எதிர்த்து பேசிய அதிமுக எம்பி எஸ் ஆர் பாலசுப்ரமணியனுக்கும் விவசாயம் பற்றி தெரியாதா? விவசாயி என்பவர் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை ஆதரிக்க மாட்டார். விவசாயி என்பவர் விவசாயிகளின் திட்டமான கிசானில் முறைகேடு செய்ய மாட்டார். மத்திய அரசின் சட்டங்களைப் பற்றி ஆராய்ந்து கருத்து சொல்ல விவசாயியாக இருக்க அவசியம் இல்லை. வேளாண்மை பற்றிய அடிப்படை அறிவு, விவசாயிகள் நலனில் அன்பு, அக்கறை இருந்தாலே போதும்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

அதிமுக எம்பி எஸ்.ஆர்.பாலசுப்ரமணியனுக்கும் விவசாயம் பற்றி தெரியாதா?  முதல்வருக்கு ஸ்டாலின் பதிலடி!

தமிழக அரசியல் களத்தில் திமுகவுக்கு தற்போது கிடைத்துள்ள துருப்பு சீட்டு விவசாய மசோதா. இந்த மசோதா தான் அதிமுகவுக்கு தலைக்கு மேல் கத்தி தொங்கும் சூழலாக அமைந்துள்ளது. வேளாண்துறையில் சீர்திருத்தம் என்ற பெயரில் மக்களவையில் நிறைவேறிய 3 மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் நாடாளுமன்றத்தில் அதிமுக விவசாய மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தது. அதே சமயம் மாநிலங்களவையில் அதிமுகவின் மூத்த எம்.பி எஸ்.ஆர் பாலசுப்பிரமணியன் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஒருபுறம் வேளாண் மசோதாக்கள் விவசாயிகள் மற்றும் கொள்முதல் செய்வோரை பாதிக்காது என கூறிய தமிழக முதல்வர் பழனிசாமி இதற்கு ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.