அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணனுக்கு கொரோனா!

 

அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணனுக்கு கொரோனா!

அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணனுக்கு கொரோனா!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 5,776 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே தமிழகத்தில் 7 ஆம் கட்ட ஊரடங்கு முடிவுக்கு வந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதில் பல சட்டமன்ற உறுப்பினர்கள், எம்பிக்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வருகின்றனர்.

அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணனுக்கு கொரோனா!

இந்நிலையில் அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நவநீதகிருஷ்ணன் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.