அதிமுக எம்எல்ஏ-க்கள் கைதை கண்டித்து, ஈரோட்டில் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்!

 

அதிமுக எம்எல்ஏ-க்கள் கைதை கண்டித்து, ஈரோட்டில் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்!

ஈரோடு

ஜெயலலிதா பல்கலை.யை அண்ணாமலை பல்கலை.யுடன் இணைப்பதற்கு எதிராக போராடிய அதிமுக எம்எல்ஏ-க்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து, ஈரோட்டில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரிலான பல்கலைக் கழகத்தை, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைக்கும் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அக்கட்சி எம்எல்ஏ-க்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, அவர்களை போலீசார் கைது செய்தனர்.

அதிமுக எம்எல்ஏ-க்கள் கைதை கண்டித்து, ஈரோட்டில் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்!

ஜெயலலிதா பல்கலை.யை, அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்தும், அதிமுக எம்எல்ஏ-க்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் மாநிலம் முழுவதும் அதிமுகவினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக, ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவும் ஆன கே.எஸ்.தென்னரசு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிச்சாமி, பெரியார் நகர் மனோகரன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். மேலும், ஜெயலலிதா பல்கலை.யை, அண்ணாமலை பல்கலை.யுடன் இணைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷமிட்டனர். போராட்டம் காரணமாக, பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.