புதுச்சேரியில் சுகாதாரத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிமுக எம்.எல்.ஏக்கள் தர்ணா!

புதுச்சேரியில் சுகாதாரத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிமுக எம்.எல்.ஏக்கள் தர்ணா!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு இந்தியாவில் ஒரே நாளில் 83,883 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 68,584 பேர் குணமடைந்த நிலையில் 1,043 பேர் உயிரிழந்துள்ளனர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் சுகாதாரத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிமுக எம்.எல்.ஏக்கள் தர்ணா!

கர்நாடகா, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி, தமிழகம் என பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு வீரியம் கூடி வருகிறது. குறிப்பாக புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து புதுச்சேரி அரசு மேற்கொண்டு வருவதாகவும், மக்கள் அதற்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும் அம்மாநில முதல்வர் நாராயணசாமி வேதனை தெரிவித்திருந்தார்.

புதுச்சேரியில் சுகாதாரத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிமுக எம்.எல்.ஏக்கள் தர்ணா!

இந்நிலையில் புதுச்சேரியில் சுகாதாரத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிமுக எம்.எல்.ஏக்கள் தர்ணா போராட்டம் மேற்கொண்டனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் புதுச்சேரி அரசு அலட்சியம் காட்டுவதாக கூறி சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்தை எம்எல்ஏக்கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.