சிதம்பரம் நடராஜர் கோயில் விழாவில் அனுமதிக்கக்கோரி அதிமுக எம்எல்ஏ போராட்டம்!

 

சிதம்பரம் நடராஜர் கோயில் விழாவில் அனுமதிக்கக்கோரி அதிமுக எம்எல்ஏ போராட்டம்!

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன விழாவில் பக்தர்களை அனுமதிக்கக்கோரி அதிமுக எம்எல்ஏ பாண்டியன் தலைமையில் பக்தர்கள் போராட்டம் நடத்தினர்.

சிதம்பரம் நடராஜர் கோயில் விழாவில் அனுமதிக்கக்கோரி அதிமுக எம்எல்ஏ போராட்டம்!

புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சனம் மற்றும் ஆருத்ரா திருவிழா இரண்டும் வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு கொரோனா காரணமாக ஆனித்திருமஞ்சனம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இருப்பினும் பல பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் கோயில் வளாகத்தில் பக்தர்கள் இன்றி கோயில் விழாக்கள் நடைபெற்று வந்தது.அதேபோல் கடந்த 6 ஆம் தேதி சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன விழா பக்தர்கள் அனுமதியின்றி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆனி திருமஞ்சன விழாவின் முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா வரும் 14 ஆம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விழா கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 15-ஆம் தேதி நடைபெறும் திருமஞ்சன விழாவிற்கும் பக்தர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயில் விழாவில் அனுமதிக்கக்கோரி அதிமுக எம்எல்ஏ போராட்டம்!

இந்நிலையில் சிதம்பரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ பாண்டியன் தலைமையில் ஆனித்திருமஞ்சன விழா தேரோட்டத்தை ரதவீதிகளில் நடத்த அனுமதி வழங்கக் கோரி போராட்டம் நடத்தப்பட்டது.இதில் பாஜக நிர்வாகிகள் ,அதிமுக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். கொரோனா பொது முடக்கம் அமலில் உள்ளதால் கோயிலுக்குள்ளேயே தேர் மற்றும் தரிசன விழா பக்தர்கள் அனுமதியின்றி நடத்திக்கொள்ள பொது தீட்சிதர்கள் தெரிவித்த நிலையில் அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் அதற்கு தடை விதிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் ஆனந்த் , டிஎஸ்பி ரமேஷ் ராஜ் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து தங்களின் கோரிக்கையை அரசுக்கு பரிந்துரை செய்வதாக தெரிவித்ததால் சாலை மறியல் கைவிடப்பட்டது.