விபத்தில் சிக்கிய முதியவருக்கு முதலுதவி அளித்த அதிமுக எம்எல்ஏ : குவியும் பாராட்டு!

 

விபத்தில் சிக்கிய முதியவருக்கு முதலுதவி அளித்த அதிமுக எம்எல்ஏ : குவியும் பாராட்டு!

விபத்தில் காயமடைந்த முதியவருக்கு வேடசந்தூர் அதிமுக எம்எல்ஏ பரமசிவம் முதலுதவி அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ டாக்டர். பரமசிவம். இவர் கட்சி நிகழ்ச்சிக்காக வேடசந்தூரில் இருந்து அய்யலூர் நோக்கி தனது காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது தண்ணீர் பந்தம்பட்டி என்ற இடத்தில் முதியவர் ஒருவர் மீது ஆட்டோ மோதி அவர் பலத்த காயங்களுடன் சாலையில் கிடந்துள்ளார்.

விபத்தில் சிக்கிய முதியவருக்கு முதலுதவி அளித்த அதிமுக எம்எல்ஏ : குவியும் பாராட்டு!

இதையடுத்து அவ்வழியாக சென்ற அதிமுக எம்எல்ஏ பரமசிவம் உடனடியாக காரில் இருந்து இறங்கி முதியவருக்கு முதலுதவி செய்த பின் அவரை ஆட்டோவில் வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.

விபத்தில் சிக்கிய முதியவருக்கு முதலுதவி அளித்த அதிமுக எம்எல்ஏ : குவியும் பாராட்டு!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ முதலில் தான் ஒரு மருத்துவர் என்பதை இந்த தருணத்தில் நிரூபித்து விட்டார் என்று பலரும் அதிமுக எம்எல்ஏ டாக்டர்.பரமசிவத்திற்கு பாராட்டு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது .