சமூக இடைவெளியைத் தொடர்ந்து காற்றில் பறக்கவிடும் அ.தி.மு.க அமைச்சர்கள்! – எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிக்கினார்

சமூக இடைவெளியின்றி நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க பொது மக்கள் சமூக பரவல் உள்ளிட்டவற்றை கவனமாக பின்பற்ற வேண்டும் என்று அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், அ.தி.மு.க அமைச்சர்கள், முதலமைச்சர் பங்கேற்கும் விழாக்களில் சமூக இடைவெளி மீறப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இந்தநிலையில் சென்னை வளசரவாக்கம் சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சமூக இடைவெளியின்றி மக்கள் கூடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வளசரவாக்கம் மண்டலத்தில் கொரோனா தடுப்பு பணிகளை தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு நடத்தினார். அதைத் தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரும் மிக நெருக்கமாக அமர வைக்கப்பட்டனர். ஒரு சிறிய இடத்தில் அளவுக்கு அதிகமாக மக்கள் திரட்டி அமர வைக்கப்பட்டிருந்தனர். அமைச்சரைச் சுற்றி ஏராளமானவர்கள் நெருக்கமாக நின்றனர், டி.வி கேமரமேன்களும் நிருபர்களும் கூட நெருக்கியடித்து நின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
உயிரைக் கொடுத்து போராடுகிறோம் என்று வார்த்தையால் சொன்னால் போதாது, கொரோனாவைக் கட்டுப்படுத்த உண்மையில் களத்தில் இறங்கி, மருத்துவர்கள், பொது மக்களுக்குத் தேவையானதை செய்து கொடுக்க வேண்டும். அப்போதுதான் கொரோனா கட்டுக்குள் வரும் என்று எச்சரிக்கின்றனர் இணையவாசிகள்.

Most Popular

ஆன்லைனில் ரம்மி விளையாடிய காவலர் தூக்கிட்டு தற்கொலை!

ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்த காவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி ஜீயபுரம் காவல் நிலைய காவலர் ஆனந்த். இவர் ஆன்லைனில் ரம்மி விளையாடுவதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார்....

காட்டுப் பகுதி… எல்லை மீறிய காதல் ஜோடி… வீடியோ எடுத்த கும்பல்!- கடைசியில் நடந்த பரிதாபம்

காட்டுப் பகுதியில் காதல் ஜோடி எல்லை மீறி கொண்டிருந்ததை வீடியோ எடுத்து கும்பல் ஒன்று அவர்களை மிரட்டி பணம், செல்போனை கொள்ளையடித்து சென்றது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை...

வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது!

சென்னை ஆவடி அடுத்த கொள்ளுமேடு கிராமத்தில் 16 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார் தற்போது ஊரடங்கு...

கேரளாவில் விமானம் இரண்டாக உடைந்ததில் 2 விமானிகள் உள்பட 17 பேர் பலி !

கேரளாவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இரண்டாக உடைந்ததில் 2 விமானிகள் உள்பட 17 பேர் பலியாகியுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம்  துபாயிலிருந்து கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும்போது...