ராமதாஸுடன் அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி இன்று சந்திப்பு!

 

ராமதாஸுடன் அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி இன்று சந்திப்பு!

தொகுதி பங்கீடு குறித்து அதிமுக அமைச்சர்கள் இன்று பாமக நிறுவனர் ராமதாஸை சந்திக்கவுள்ளனர்.

ராமதாஸுடன் அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி இன்று சந்திப்பு!

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதனால் அதிமுக – திமுக கட்சிகள் தங்கள் தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளன. அதிமுக பொறுத்தவரை முதல்வர் பழனிசாமி நேரடியாக களமிறங்கி மாவட்டம் தோறும் பிரச்சாரம் செய்து வருகிறார். அதே போல் மு.க. ஸ்டாலினும் மக்கள் கிராம சபைக்கூட்டம் மூலம் மக்களை நேரடியாக சந்தித்து வருகின்றனர்.மக்களவை தேர்தலில் இருந்த கூட்டணி கட்சிகள் இன்னும் உள்ளதாக அதிமுக தரப்பில் சொல்லிவரும் நிலையில் முதல்வர் வேட்பாளர் சர்ச்சையில் பாஜக, தொகுதி பங்கீடு சலசலப்பில் தேமுதிக ஆகியவை உள்ளன.

ராமதாஸுடன் அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி இன்று சந்திப்பு!

இந்நிலையில் பா.ம.க நிறுவனர் ராமதாஸுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி இன்று சந்திக்கின்றனர். தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்தில் இன்று நண்பகல் 12 மணிக்கு சந்திப்பு நிகழ்கிறது. கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
20% தனி இடஒதுக்கீடு தராவிட்டால் அரசியல் முடிவு எடுப்போம் என பா.ம.க அறிவித்திருந்த நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக தெரிகிறது.