முதல்வர் பழனிசாமி வீட்டின் முன் அதிமுக பிரமுகர் தீக்குளிக்க முயற்சி!

 

முதல்வர் பழனிசாமி வீட்டின் முன் அதிமுக பிரமுகர் தீக்குளிக்க முயற்சி!

முதல்வர் பழனிசாமியின் இல்லத்திற்கு முன்பு, செட்டியப்பட்டி அதிமுக கிளை செயலாளர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் செட்டியப்பட்டி அதிமுக கிளை செயலாளராக இருந்து வருகிறார் சின்னசாமி. இன்று காலை சென்னை வந்த இவர், கிரீன்வேஸ் சாலையில் இருக்கும் முதல்வரின் இல்லத்தின் முன் தீக்குளிக்க முயன்றுள்ளார். அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அவரை தீக்குளிக்க விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

முதல்வர் பழனிசாமி வீட்டின் முன் அதிமுக பிரமுகர் தீக்குளிக்க முயற்சி!

இதனையடுத்து அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர் உறவினர் ஒருவருக்கு வேலை வாங்கித் தருவதற்காக ரூ.8 லட்சம் பணத்தை முன்னாள் எம்.எல்.ஏ பூவை செழியனிடம் கொடுத்ததாகவும், வேலை வாங்கித் தராமல் அவர் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் சின்னசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.